உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் 6

கரையுள் நில்லாமல் காலந் திரிந்தாலும் தாம் திரியார்" என உரை வரைகின்றார். ஆதலால், ஊழி என்பதற்குக் காலப் பொருள் தருகின்றார்.

66

இவ்வூழியைப் பரிபாடல் நன்கு கூறுகின்றது.

கருவளர் வானத் திசையில் தோன்றி

உருவறி வாரா ஒன்றன் ஊழியும், உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்,

செந்தீச் சுடரிய ஊழியும், பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும், அவையிற்

றுண்முறை வெள்ள மூழ்கி யார்தருபு மீண்டும் பீடுயர் பீண்டி யவற்றிற்கும்

உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்”

என விரிகின்றது (2:5-12). ஒலிவடிவான வெளி என்னும் ஒன்றாம் ஊழியும், அவ்வெளியில் இருந்த வளி என்னும் ஊழியும், அதன் பின் நீர், தீ, நிலம் எனத் தோன்றிய ஊழிகளும் என ஐவகை ஊழிகளை இப்பகுதி கூறுகின்றது. இவ்வூழி, இயற்கை வழிப் படுதலை அறிய இப்பகுதி உதவும்.

முப்பொருள்

ப்

தொல்காப்பியனார் பொருள்களை முப்பாற் படுத்தினார். அவை, முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்பன. இம் முப்பொருள்களுள் முதற்பொருளே அடிப்படைப் பொருளாம். அது நிலமும் பொழுதும் (இடமும் காலமும்) என இருவகைப்படும். கருப்பொருள் என்பது முதற்பொருள் வழி யாகப் பெறும் இயற்கைப் பொருள்களும், அவற்றைக் கொண்டு மாந்தர் ஆக்கிக் கொள்ளும் பொருள்களுமாம். இனி, உரிப் பொருளோ எனின் ஒழுக்கப் பொருளாகும். இம் முப்பொருள் விளக்கமும் அறிய வாய்க்கும் நூல் திருக்குறள் ஆகும்.

இவற்றுள் முதற் பொருள் லிளக்கமாக வான்சிறப்பும், ஊழும், காலமறிதல், இடமறிதல் என்பனவும் அதிகார அள வால் செறிகின்றன. பிறபிற இடங்களிலும் இம் முதற் பொருள் விளக்கம் பெறுகின்றமை அறியலாம். இம் முதற் பொருள்-கால ட-வழியாக ஏற்படும் மாற்றங்களே ஊழாகும். ஆதலால், அறிவறிந்து ஆளவல்ல அமைச்சனுக்கும் ஓர் ஆணையிடு கின்றார் வள்ளுவர்: