உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம் 6

உண்டா? சிந்திக்கின்ற திறம் உண்டா? ஏதோ உள்ள அறிவும் பயிற்சியால் வந்த அறிவே! பயிற்சி உள்ள அளவு அமைந்த அறிவே! கல்வி அறிவில்லாத மாந்தர் மாந்தர் அல்லர்; 'கற்றறிவுடையவரே மாந்தர்; மற்றவர் விலங்கு போன்றவர்; பறவை போன்றவர்' (410). ஊர்வன. நீந்துவன போன்றவர். கல்லாதான்

கல்வி அறிவில்லாத ஒருவன் தன்னை அறிவுடையவனாகக் கருதிக் கொள்வதும் உண்டு; தனக்குச் சொல்லும் ஆற்றல் உண்டு என்று எண்ணிக் கொள்வதும் உண்டு. ஆனால் அவன் ஒன்றைச் சொல்லத் தொடங்கிய அளவிலேயே அவன் அறியாமை பலர்க்கும் புலப்பட்டு விடும். (405).

கல்வி அறிவில்லாதவன், சில வேளைகளில் சிறந்த அறி வாளன் போலப் பேசுவதும் உண்டு. அத்தகு அறிவையும் ‘எப்பொழுதும் இருக்கும் கல்வி அறிவு' என்று அறிவாளர் கொள்ள மாட்டார்; ஆதலால் அச்சொல்லை மதியார். (404). மிதியடி

மிதியடி போட்டுக் கொண்டு சென்றாலும், வீட்டிற்கு வெளியே சென்று திரும்பும் போது மிதியடியைக் கழற்றி வைத்து விட்டு, காலைக் கழுவிக் கொண்டு, வீட்டுக்குள் வருவதே நம் வழக்கம். படக் கூடாதவை கூட காலில் அறிந்தோ, அறி யாமலோ பட்டிருக்கலாம். அவற்றையும் வீட்டுள் கொண்டு வந்து விடக் கூடாதே என்பதற்காகச் செய்யும் செயலே காலைக் கழுவுதலாகும். கழுவாக் காலொடு, முற்றம் கடந்து, கூடம் கடந்து படுக்கையறைக்கும் சென்று படுக்கையில் அக்கழுவாக் காலை வைத்தல் எத்தகைய அருவறுப்பானது? அது போல்வது கல்வி யறிவில்லாதவர் கற்றவர்கள் கூடிய அவைக்குச் செல்வதும் ஆங்கு இருப்பதுமாம். (840).

தற்பகை

கல்வி அறிவில்லாதவர்க்குத் துன்பம் உண்டாக்குவதற்கு வேறு எவருமே வேண்டியது இல்லை; பகைவர் வந்துதான் செய்ய வேண்டும் என்பதும் இல்லை! அறிவு இல்லாதவன் தனக்குத்தானே வேண்டிய அளவும் துன்பத்தை உண்டாக்கிக் கொள்வான். (843).