உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

3

மண்ணால் செய்யப்பட்ட பொ(ய்)ம்மைக்கும், வண்ணத்தால் தீட்டப்பட்ட ஓவியத்திற்கும் அவனு(ளு)க்கும் என்ன வேறுபாடு? (407) எதுவும் வேறுபாடு இல்லை.

அறிவுக்கண்

உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உடையன. மாந்தரே ஆறறிவுடையவர். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐந்து அறிவுகளுடன், சிந்திக்கும் ஆறாம் அறிவும் (மன அறிவும்) உடையவர்கள்! அவர்கள் கண்களும், எறும்புக் கண்களா? வண்டுக் கண்களா? யானைக் கண்களா? புலிக் கண்களா? அறிவுக் கண்கள் அல்லவா! எழுதவும் எழுதியதைப் படிக்கவும் பயன் படும் அறிவுக் கண்கள் அல்லவா!

வண்டும், நண்டும், யானையும் பூனையும் போல எழுத் தறியாக் கண்கள் கண்களா? 'இந்தக் கடிதத்தைப் படியுங்கள்' என்றால் கையால் தடவிப் பார்த்துப் பார்வை இல்லாதவர்களும் படிப்பறிவு பெற்று வரும் நாளில், கண் பார்வை இருந்தும் ‘படிக்கத் தெரியாது' என்பவரும், கையெழுத்துப் போடவும் தெரியாது ‘கீறல்' போடுபவரும் பார்வையுடையவர் ஆவாரா? கண் இருந்தும் ஒளியில்லாதவர் அவர்! அதனால் எண்ணும் எழுத்துமே மக்களுக்குக் கண்கள் என்றும் (392) கற்றறிந்தவரே கண்ணுடையவர்; கல்லாதவர் கண் என்னும் பெயரால் புண் ணுடையவர் என்றும் (393) கூறினார்.

களர்மண்

மண் வகையிலே ‘களர்மண்’ என்பது ஒன்று. அது விளை வுக்குப் பயன்படாதது; என்ன பயிர் செய்யப்பட்டாலும் தீய்ந்து பயன் தராதது. கல்வி அறிவில்லாதவர், மாந்தர் எனத் தோற்றம் கொண்டு இருந்தாலும், மண் எனத் தோற்றம் கொண்டு விளை பயன் இல்லாத களர்மண் போல அவர் மாந்தர் ஆகார். 'ஏதோ ஒருவர் இருக்கிறார்' என்பதை அல்லாமல் உரிய பெருமைக்கு உரியவர் ஆகார். (409).

விலங்கு

கிளி பேசுகின்றது; நாகணவாய் பேசுகின்றது; மயில் ஆடுகின்றது; குயில் பாடுகின்றது; மாடு வண்டி இழுக்கின்றது; ஏர் உழுகின்றது; யானை புலி முதலியவை கூட பயிற்சியால் ஏவியபடி நடக்கின்றன. ஆனால் அவற்றுக்குக் கல்வி அறிவு