198
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
இருமனம் ஒருமனமாகக் கூட வேண்டிய-வாழ்வு, திருமண வாழ்வு! ஒருமனப்பாடே திருமணப் பாடு! ஆதலால், மனப் பொருளாம் செம்பொருள் வழிபாடு முதன்மையாகச் செய்யப் படுகின்றது.
மணமக்கள் தம் வலக்கையை இடப்பால் நெஞ்சத்தில் வைத்துக் கொள்ளச் செய்தல்; செம்பொருள் நுகர்வு நடத்து பவரும் பிறரும், அவ்வாறே கையை வைத்துக் கொள்ளல்.
"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்” என்னும் மணிமொழியை மும்முறை சொல்லிச் சொல்லச் செய்தல். “நன்றின்பால் உய்ப்ப தறிவு”
என்னும் மணிமொழியை அப்படியே மும்முறை சொல்லிச்
சொல்லச் செய்தல்.
இவ்விரண்டு மொழிகளையும் முன்னே கூறியவாறே மூன்று சுற்றுகள் வருமாறு சொல்லிச், சொல்லச் செய்து வணக்கத்துடன் நிறைவித்தல்.
து
மனமாசு நீக்கத்திற்குரிய பள்ளியே, இல்லறம்! அதன் ஏடு தொடக்கமே திருமணம்! மாசடைந்த கண்ணாடி முகத்தை எப்படிக் காட்டுகிறது? மாசு நீங்கிய மணி எப்படிச் சுடர்கிறது! எளிய இனிய அரிய அடிப்படை அறம் மனமாசு நீக்கம்!
மனம் தாவும்-ஓடும்! அதனை அதன் போக்கில் போக விடாமல் தடுத்து நல்ல வழியில் செல்லச் செய்யும் இயக்கி- ஓட்டி-செலுத்தி-அறிவே! நல்லவழியில் செல்லச் செய்தல் தானே, ஆக்கத்தில் எல்லாம் ஆக்கம்! ஆதலால், இச் செம் பொருள், வாழ்வியல் வளமாக்கும்.
3.தாய் நாட்டு மண் வழிபாடு
மண்ணில் இருந்து தோன்றுவது மணம். வெளி, வளி, தீ, நீர் என்பவற்றுக்கு முறையே ஒலி, ஊறு, ஒளி, சுவை என்பவை வ சிறப்புக் கூறுகள். அவ்வாறே மண்ணுக்குச் சிறப்புக் கூறு மணம். ‘சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஆகியவற்றின் வகையறிந்தார் வழிப்பட்டதே உலகம்' என்பதும், கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிவும் ஐம்புலனும் பெண்ணிடத்தே தான் உண்டு' என்பதும் வள்ளுவம். ஆதலால், அவ்வைம்புல இன்பப் புகு வாயிலாம் திருமணத்தில் மண்ணின் வழிபாடு செய்ய வேண்டும் சீர்மை உடையதாம்.