உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி 1

199

நாம் நிற்கும் நிலை பேற்றுக்கு இடமாவது, இந் நிலம் தானே! நிலை பெற்ற புகழுக்கு இடமாவதும், இந் நிலம் தானே! நாம் துய்க்கும் துய்ப்புப் பொருள்களுக் கெல்லாம் வைப்பக மாகத் திகழ்வது இவ்வையகம் தானே!

இம் மண்ணில் தானே நம்முந்தையர் வாழ்ந்தனர்; அவர் களுக்கு முந்தையரும் அம்முந்தையர்க்கு முந்தையரும் தோன்றித் துலங்கினர். அவர்கள் கொடை தானே நாம்! அவர்கள் வழி வழிக் கொடைகள் தாமே, நம் அறிவுப் பேறுகளும் பண்பாட்டுப் பேறுகளும்!

இவற்றுக் கெல்லாம் ஒருமித்த உள்ளத்தால் நன்றி செலுத்தும் வழிபாடே, தாய்நாட்டு மண் வழிபாடாகும்.

தட்டத்தில் வைக்கப்பட்ட தாய்நாட்டு மண்ணின் மேல், மணமகனும் மணமகளும் உதிர்மலர் தனித்தனி தூவி வழிபடச் செய்தல்.

4. திருவள்ளுவர் வழிபாடு அல்லது திருக்குறள் வழிபாடு

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்றவர் திரு வள்ளுவர். அறத்தான் வருவதே இன்பம் என்றவரும் அவர்; வாழ்வாங்கு வாழ்வதற்கு வேண்டும் வளமான கருத்துக்களை யெல்லாம் ஒருங்கே தொகுத்து உலகுக்கு வழங்கிய ஒரு பெருவள்ளலும் அவரே!

இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந் நன்றி அறிதல் என வரன் முறையே வேண்டுவ வெல்லாம் கூறி ஈகையும், புகழும் நிறைவில் வைத்து, இல்லறச் சிறப்பை நிலை நாட்டிய திருவள்ளுவரை வணங்கல்-வழிபாட்டு அளவில் நிற்பதன்று. "பின்பற்றி நடப்போம்" "பெருந்தக்க வாழ்வு எய்துவோம் என்பதற்குரிய உறுதிமொழி கூறிக்கடைப் பிடியாகக்கொள்ளும் தெளிவு விளக்கமுமாம்.

பேறுகளில் எல்லாம் தலையாய பேறு, 'அறிவறிந்த மக்கட்பேறு' என்றார் வள்ளுவர். தம் பொருள் என்பதம் மக்கள்,' என்றார். ‘தம் மக்கள் மொழி கேட்டலும் அவர்கள் தழுவலும் தனிப்பேரின்பம் என்றார். உயிர் தளிர்க்கச் செய்யும் அமிழ்த மாகிய துணைவி தந்த அமிழ்தம், மக்கள்’ என்றார். வாழ்க்கைத் துணைவியைக் ‘குடிகாக்கும் காவல் கடனாட்டி' என்றார். 'தாய்