திருக்குறள் ஆராய்ச்சி 1
―
205
குறளாயத் திருமணமுறை
வேண்டத் தக்கதா?
ஆம்! வேண்டத் தக்கதே!
ஏன்?
குறளாயத் திருமணம்
“நடத்துபவர்க்கும் நடத்தப்படுபவர்க்கும் தொடர்பு உண்டு!”
“நடத்துபவர் மொழிக்கும் நடத்தப்படுபவர் மொழிக்கும் தொடர்பு உண்டு!”
66
“நடத்துபவர் செயல்களும் கருத்துகளும் நடத்தப்படுபவர்க்குத் தெளிவாகவும் முற்றாகவும் முறையாகவும் புரியும்.'
“நடத்துபவர், நடத்தப்படுபவர் நம்பிக்கைக்கும் நடைமுறைக்கும் ஒத்தவற்றையே
ஒளிவு மறைவு இன்றி முன்வைத்து நடத்துகிறார்.”
“நடத்துபவர் நடத்தப் படுபவர் ஆகியோர்
இடையே பிறப்பு வேறுபாட்டுக் கருத்து இல்லவே இல்லை. ஆதலால் தாழ்விலாத்
தன்மானம் நிலைப்படுகிறது.”
குறளாயத் திருமண முறையால் நம் வழி, வழி மரபியல் பண்பாடு காக்கப்படுகிறது. ஏனெனில் அம்முறை முற்றாக மறைக்கப்பட்டது (அகம் 86. 136). வாழ்வின் நிலைக் களமாம் திருமணச் சடங்கு கூடத் தமிழ் முறையில் இல்லை என்று (தந்நலம் மறைத்து) உள் நகுவார் நகைப்பு, நகைப்புக்கு ஆளாகி விடுகிறது.