206
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
தாய்மொழியில் நிகழ்த்தப்படும் சடங்கால் சடங்கின் உட்பொருள்வளம் மணமக்களோடு, மணவிழாவுக்கு வந்தோ
ருக்கும் தெளிவுறுகின்றது.
குறளாயத் திருமணங் கொண்டோர்,
நன்மக்களைப் பெற்று நல்வாழ்வு
கொண்டு சீராட்டும் பாராட்டும் பெற்று வாழ்தலால், ‘வேதவழித் திருமணம் மாறின் கேடாம்’ என்னும் ஏமாற்றுரை பொய்யாக்கப் படுகின்றது.
வேதவழியை விடுத்து அவரே குறளாயவழி மண முறையை மேற்கொண்டு நடாத்தின், இது காறும் தமிழ் மாந்தர்க்குப் புரியாமல் செய்த-செய்து வருகின்ற-செயலுக்குக் கழுவாய் தேடிக் கொண்ட பெருமையும் ஆம். பேறும் ஆம்!
ஏனெனில், குறளியம் எவ்வின எம்மொழி மாந்தரையும் ஒப்பக் கருதும் உலக ஒளிநெறி கொண்டது!
மண்ணின் மைந்தர் மொழியில் சடங்குகளும் வழிபாடு களும் நடைபெறுவதே வயப்படுத்தும் என்பதைக் குறுகிய நோக்கம் விடுத்துப் பெரு நோக்கில், கிறித்தவ நடைமுறைகளைக் கண்டேனும், அச்சமயப் பெருக்க அடிப்படை அஃதென்பதை அறிந்தேனும், ஆர்வத்தால் ஈடுபடுதல் இருபாலார்க்கும் நலமாம். வாழிய நலனே! வாழிய வள்ளுவம்!
வாழிய வையகம்!