6
ஒரு சொல்
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
கல்வியில் சிறந்த மகன், தன் பெற்றோர்க்குப் பெருமையும் அருமையும் சேர்ப்பன பலவாகலாம். அவற்றுள் எல்லாம் தலையாயது, இம்மகனைப் பெற்ற பெற்றோர் எத்தகைய பெருமைக்குரியவர்' என்று அவையோரும் அயலோரும் பாராட்டுமாறு அறிவுடையவனாக விளங்குதலாகும் (69, 70) என்று மகனுக்குரிய கடமை ஈதெனக் குறித்தார்.
தோற்றம்
க
மக்களை மக்களாக்கும் கல்வியை, கண்ணாகும் கல்வியை, செல்வத்தினும் செல்வமாம் கல்வியைத் தம் மகவு பெற வேண்டும் என்னும் பேரார்வத்தால் பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். கல்வி கற்பதற்காகச் செல்லும் பிள்ளை, அங்கே எப்படிக் கற்க வேண்டும்? எத்தகைய சிறப்படைய வேண்டும்? அது, 'ஒருவர் ஒரு செயலில் ஈடுபட்டால் அச் செயலுக்கும் தமக்கும் புகழுண்டாகுமாறு ஈடுபடுதல் வேண்டும். அவ்வாறு ஈடுபடும் திறம் இல்லார், அதில் தலைப்படாது இருத்தலே அவர்க்கும் அச் செயலுக்கும் நன்மையாகும்' (236) என்பதாகும்.
நிறைக்குறை
ஒருவன் தன் காலுக்குச் செருப்பில்லையே என்று கவலைப் பட்டான். அப்போது காலே இல்லாத ஒருவன், தன் தோட் கம்புகளின் துணையால் தன் கடமையைச் செய்வதற்குக் களிப்புடன் புறப்படுவதைக் கண்டான். அவனினும் தான், 'பெரிய பேற்றைப் பெற்றிருப்பதாக' உணர்ந்தான்.
அதனால், 'கால், கை, கண், காது முதலிய உறுப்புகள் குறையுடை யனவாக அமைதல் குறையுடையனவாகா. அவை இருந்தாலும் இல்லாவிடினும், அறிய வேண்டியவற்றை அறிந்து செய்ய வேண்டியவற்றைச் செம்மையாகச் செய்யாதிருத்தலே குறையாகும்' (618) என்றார் திருவள்ளுவர்.
நிற்கக் கற்றல்
எம் மகனாயினும் எம் மகளாயினும் கட்டாயம் கல்வி கற்றல் வேண்டும். அக்கல்வியையும் ஐயமும் திரியும் இல்லாமல் தெளிவாகக் கற்க வேண்டும்; கற்கத்தக்க நூல்கள் இவையெனத் தேர்ந்து கற்கவும் வேண்டும்; இவ்வாறெல்லாம் கற்பதன் பயனை