உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

1

7

அடைவதற்காகக் கற்றபடியே கடைப்பிடித்தல் வேண்டும். விதைத்த முளை முளைத்தென்ன, வளர்ந்தென்ன, கதிர் விட்டென்ன, மணி இல்லாத பதராக இருந்தால், முளைத்து வளர்ந்து பயன் ல்லாமை மட்டுமன்று; பட்டபாடுகள் அனைத்தும் வீண்பட்டவைதாமே' என அறிவுறுத்துகிறார் வள்ளுவர் (191).

ஒப்புக் கல்வி

கற்க; கசடறக் கற்க; கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற வள்ளுவர் ஆண்பாலுக்குச் சொன்னாரா? பெண்பாலுக்குச் சொன்னாரா? வள்ளுவக் கல்வி ‘குலக்கல்வி' அன்று; ‘பாற் கல்வி' அன்று; 'பொதுக்கல்வி;’ ‘பிறப்பு ஒக்கும் எல்லா யிர்க்கும்' என்ற வகையில் கண்ட ‘பிறப்பொப்புக் கல்வி’! நானில வளம்

கல்வி குடிவளப் பொருள் மட்டுமா? இல்லை; நாட்டு வளப் பொருளும், நானில வளப் பொருளும் அதுவே. அதனால், பொருட்பாலின் முதல் அதிகாரமாகிய இறைமாட்சியை அடுத்தே கல்வியை வைத்தார். கல்வி நிறைமாட்சியே, இறை மாட்சி என்பதன் குறிப்பு அது. கல்வி அறிவு இல்லானைக் காவலன் எனக் கருதவும் செய்யாதது வள்ளுவம் (383).

ஊற்று

உள்ளூறும் கல்வியை எண்ணும் வள்ளுவர்க்கு, உள்ளூறும் ஊற்று உவமையாகத் தோன்றுகின்றது. கையால் கிளைத்த அளவிலும், காலால் கிளறிய அளவிலும் நீர் சுரப்பது மணல் ஊற்று. அவ்வூற்றுக்கு நீர் எங்கே இருந்தது? அதன் உள்ளேயே இருந்தது! அதுவே தோண்டிய அளவில் வெளிப்பட்டது; அதுபோல் கல்வியும் வெளியேயிருந்து சுரப்பதன்று: உள்ளே இருந்தே சுரப்பது! தோண்டிய அளவுக்குத் தகத்தக நீர் சுரப்பது போலக், கற்ற அளவுக்குத் தகத்தகக் கல்வி பெருகும் என்கிறார்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”

(396)

இதனால், 'உள்ளிருக்கும் கல்வியை வெளிப்படுத்துவதே கற்பித்தல்' என்று இக்காலத்தவர் கூறும் ஆய்வுக் கருத்து வள்ளுவர் வழியே முன்னமே வெளிப்பட்டமை அறியலாம்.