8
கற்றார்
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
பணிந்து நின்று கற்க வேண்டும் என்றும், ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்றும் வள்ளுவர் குறிக்கிறார் (295). நீர் வேட்கையுள்ளோன் நீர் பருகுவது போலவும், பசித்துயர் உடையோன் உணவு உண்பது போலவும், ஆவலாய்க் கற்க வேண்டும் என்று பிறர் கூறுவர்.
ஒரு முகப்பாடு
க
கற்கும்போது அக்கல்வியே கருத்தாக மாணவர் இருத்தல் வேண்டும். அவர்களின் கண் ஒன்றைக் காண, வாய் ஒன்றைப் பேச, காது ஒன்றைக் கேட்க, கை ஒன்று செய்ய, கால் தாளம் போட இருக்குமானால் கற்கும் கல்விபதியுமோ? கற்பிக்கும் அல்லது கற்கும் கடமையிலேயே, கண்ணும் காதும் கருத்தும் எல்லாம் ஒருமுகப்பட்டுக் கற்றல் வேண்டும். அவ்வாறு கற்ற கல்வியே ஒருமுறை கேட்ட அளவில் பலமுறை கேட்ட பயனைச் செய்யும். இவ்வாறு ஒருமுகப்பட்டுக் கற்கும் கல்வியை ‘ஒருமைக் கண்தான் கற்ற கல்வி' என்பார் திருவள்ளுவர். அவ்வாறு ஒருப்பட்டுக் கற்ற கல்வியே, வாழும் நாளெல்லாம் மறந்து போகாமல் நிற்கும் என்கிறார் (398)
நூறு நாள் ஓதி ஆறுநாள் விடத் தீர்வது கல்வி ஆகாது. இரண்டுமுறை கேட்டால் அதனை அப்படியே சொல்ல வேண்டும் என்றும், ஒருமுறை பார்த்தால் அதனை அப்படியே எழுதிவிட வேண்டும் என்றும் அதுவே சிறந்த கல்வி என்றும் ஒளவையார் கூறுவார்.
துமுக்கி (துப்பாக்கி) யால் சுடும் ஒருவர் எவ்வளவு கூர்மை யாகக் குறிபார்க்கிறார். கைகால் ஆடாமல், கருவி அசையாமல், கண் இமையாமல் கருத்தை ஒருப்படுத்திச் சுட வேண்டியதற்குக் குறிவைக்கிறார் அல்லவா! அக் 'கொலை'க்குரிய முயற்சியே ஒருமுகப்பட்ட குறியாக இருக்கவேண்டுமானால் ‘கலை’க்குரிய முயற்சிக்கு, அவ்வொருமைப்பாடு வேண்டாவா?
நல்வழிச் செல்லுதல்
ஒரு வண்டியை ஓட்டுகிறோம். அவ்வண்டி மாட்டு வண்டியானால் என்ன, குதிரை வண்டியானால் என்ன, மிதி வண்டியானால் என்ன, உந்து வண்டியானால் என்ன அவ்வண்டி போகும் போக்கிலேயே விட்டுவிட்டால் என்ன ஆகும்? திக்கு,