―
திருக்குறள் ஆராய்ச்சி 1
9
ஓரம் சாரம், குண்டுகுழி, முள்முடல் ஆகியவற்றைப் பார்த்து ஓட்ட வேண்டாவா? வண்டி ஓட்டம் போல்வது தானே, வாழ்வு ஓட்டம்! அவ்வோட்டத்தை இயக்கும் இயக்கி எது? அறிவு தானே! அதனால் போன இடத்திற்குப் போகவிடாமல் தீமையில் இருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவது அறிவே ஆகும் என்றார் வள்ளுவர்.
தான்
“சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு”
-
-
(422)
கல்வி ஓட்டம் ஓடுவதற்கும், போனபோக்கில் மனத்தைப் போகவிடாமல் அடக்கி, நல்லவழியில் ஒருமுகமாகச் செலுத்தினால் பின்னே செலுத்திப் பழகினால் தான் வரும் வாழ்வியக்கத்திற்கும் அப்பயிற்சி உதவும் என நாம் அறிந்து கொள்ளல் வேண்டும். அறிவு என்பது என்ன என்பதையும் அதன் சிறப்பென்ன என்பதையும் திருவள்ளுவர் நன்றாகக் கூறியுள்ளார்.
அறிவு
எப்பொருள் எவ்வியல்பு உடையதாகத் தோற்றத்தில் தெரிந்தாலும், அதனை அப்படியே ஒப்புக் கொள்ளாமல் அதில் அமைந்துள்ள மெய்ம்மையைக் கண்டு கொள்வதே அறிவாகும்.
(355).
எப்பொருள் பற்றி எவரெவர் சொல்லக் கேட்டாலும் சொல்பவரைப் பற்றிக் கருதாமல் சொல்லப்படும் பொருளில் உள்ள மெய்த்தன்மை இன்னதென்று கண்டு கொள்வதே அறிவாகும். (423).
சான்றோர்களும் அறிஞர்களும் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை நன்றாக அறிந்து கொண்டு, அவர்கள் வாழ்வோடு தன் தன்னை இணைத்துக் கொண்டு அவர்களைப் போல் வாழ்வதே அறிவுடைமையாகும். (426).
அறிவுடையவர் என்பவர் பின்னே வரக் கூடியவை இவை என்பதை நன்றாக அறிந்து கொள்ள வல்லவர் ஆவர். அவ்வாறு அறிந்து கொள்ளாதவர் அறிவுடையவர் ஆகமாட்டார். (427).
பின்னே வரக் கூடியவை இவை என்பதை முன்னரே அறிந்து கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அதிர்ச்சியடையத் தக்கதாகிய துன்பம் எதுவும் வாராது. (429).