10
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
மற்றவை எவை இருந்தாலும் சரி; இல்லையாயினும் சரி; அறிவு என்பதொரு பொருள் உடையவரே எல்லாப் பொருளும் உடையவர்; மற்றைப் பொருள்கள் எல்லாம் இருந்தும் அறிவு என்னும் பொருள் இல்லாதவர் என்றால். அவர் எல்லாப் பொருள்களும் இல்லாதவரே ஆவர்.
66
"அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்”
அறிவுச் சிறப்பு
எத்தகைய உயர்ந்த சல்வங்கள்
எனினும்
(430)
அவை
யெல்லாம் ஒருவகையால் கேடு செய்வனவேயாம். ஆனால் எவ்வகையாலும் கேடு செய்யாத உயர்ந்த செல்வமாவது கல்வியேயாம் (400).
எத்தகைய தேர்ந்த நுண்ணிய படைக்கருவி என்றாலும் அது காக்கத் தவறுகின்ற பொழுதும் நிலையும் உண்டு. ஆனால், அறிவு என்னும் படைக் கருவியோ எந்நிலையிலும் தன்னை யுடையானைக் காக்கத் தவறுவது இல்லை.
எத்தகைய வலிய பாதுகாப்பு அரணமாக இருந்தால் கூட, பகைவர் உட்புகுந்து அழிக்கத் தக்க நிலைமை ஏற்பட்டு விடுவது உண்டு. ஆனால், அறிவு என்னும் பாதுகாப்பு அரணமோ எத்தகைய பகைவராலும் உள்ளே புகுந்து அழித்தற்கு முடியாத சிறப்புடையதாகும் (421).
கல்வி வல்லவர் எந்நாட்டினராயினும் என்ன, எவ்வூரின ராயினும் என்ன; அவர்க்கு எல்லா நாடும் அவர் நாடேயாம்; எல்லா ஊரும் அவர் ஊரேயாம்; அவ்வாறான உலக உரிமையும் உலக உறவும் தருவது கல்வியேயல்லவோ! அக் கல்வியின் பெருஞ் சிறப்பைக் கண்ணேரில் கண்டு கொண்டிருந்தும் கூட, ஒருவர் தம் உயிருள்ள அளவும் கற்றுக் கொண்டிராமல் வீணாகப் பொழுது போக்குவது எதற்காகவோ? (397).
66
ள
யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு.
கல்விக் காதல்
99
கல்வியறிவின் சிறப்புகளாக இவ்வாறெல்லாம் வள்ளுவர் கூறுவதன் நோக்கம் என்ன? “மாந்தர்காள் இங்கே வாருங்கள்!