உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இளங்குமரனார் தமிழ்வளம் 6

வரைக் கண்ட அளவில் அவர் கண்ணில் துளிக்கும் கண்ணீரே அதை வெளிப்படுத்தி விடும்.

2.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

71

அன்பு இல்லாதவர் தாம் கொண்டுள்ள எல்லாப் பொருள் களையும் தமக்கே உரியவையாகக் கொள்வர். ஆனால், அன் புடையவரோ தம் பொருள்களால் அன்றித் தம் உடலாலும் பிறர்க்குரியவராக இருப்பர்.

3.

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு.

72

அருமையாக வாய்த்த உயிர்க்கு உடலோடு கூடிய உறவு, அன்பு செலுத்துதற்கென்றே அமைந்தது என அறிவுடையோர் கூறுவர்.

4. அன்பீனும் ஆர்வ முடைமை; அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.

73

அன்பு முதற்கண் பிறரிடத்து விருப்பத்தைத் தரும்; பின்னர் அவ்விருப்பம், நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற நன்மையைத் தரும்.

5. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றார் எய்தும் சிறப்பு.

74

இவ்வுலகத்தில் இன்பமடைந்து வாழ்பவர் பெறும் சிறப்புகள் எல்லாம், அன்பினைப் போற்றி அதில் நிலைத்து அவர் வாழ்ந்த வாழ்வின் பயனென அறிந்தோர் கூறுவர். 75

6.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை.

அன்பியல் அறியாதவரே, அன்பு நற்செயலுக்கு மட்டுமே துணையாகும் என்பர். ஆனால், பாவ, வீரச் செயல்களுக்குக்கூட அவ்வன்பு துணையாதல் உண்டு.

7. என்பி லதனை வெயில்போலக் காயுமே, அன்பி லதனை அறம்.

76

எலும்பு இல்லாத புழுக்களை வெயிற்கதிர் சுடுவது போல, அறிவிருந்தும் அன்பில்லாத உயிர்களை அறக்கதிர் சுடும். 77