உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

215

8.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை, வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று.

அன்பைத் தன்னிடத்துக் கொள்ளாதவர் வாழ்வை, உயிரோடு கூடிய வாழ்வாகக் கூறுவது, வலிய பாறையின்மேல் பட்டமரம் தளிர்த்தது என்று கூறுவது போன்றது (அன் பில்லாத வாழ்வு வாழ்வன்று.)

9. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்; யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு?

78

(உயிருக்கு நலஞ்செய்யும்) உடலின் உள்ளுறுப்பாகிய அன்பு இ இல்லாதவர்க்கு, மற்றை வெளியுறுப்புகளெல்லாம் அழகாக அமைந்திருந்தாலும், அவை என்ன பயன் செய்யும்? (பயன்தரா)

10. அன்பின் வழிய துயிர்நிலை; அஃதிலார்க்

கென்புதோல் போர்த்த உடம்பு.

79

அன்புடன் கூடிய உடலே உயிருடன் கூடிய உடல்; அவ் வன்பில்லார் உடலோ, எலும்பும், தோலும் போர்த்துக் கட்டிய உயிரிலா உடல் ஆகும்.

விருந்தோம்பல்

(புதியவராக வந்தவரைப் பேணல்)

1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம், விருந்தோம்பி

வேளாண்மை செய்தல் பொருட்டு

80

இல்லத்தில் இருந்து குடும்பநலம் பேணி வாழ்க்கை நடத்து வது, தம்மைத் தேடிவரும் விருந்தினரைத் தக்கவாறு பேணி உதவி செய்தற்கேயாம்.

2. விருந்து புறத்ததாத் தானுண்டல், சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

81

விருந்தாக வந்த ஒருவர், வீட்டின் வெளியே இருக்கத் தான் வீட்டின் உள்ளே இருந்து உயிர் தளிர்க்கச் செய்யும் அமிழ்த உணவாக இருந்தாலும் உண்பது விரும்பத் தக்கது அன்று. 82 3. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.