―
திருக்குறள் ஆராய்ச்சி 1
நட்பாகக் கொள்ள விரும்புபவன் குணம்.
அவன் குடும்பம்.
அவனிடத்திலுள்ள குறைகள்.
அவனைச் சேர்ந்திருப்பவர்கள்
பழிச் செயலுக்கு நாணும் தன்மை.
உருகுமாறு எடுத்துரைத்தல்.
கடுமையாக இடித்துரைத்தல்.
உலகியல், நூலியல் அறிவு உடைமை.
225
என்னும் இவ்வெட்டும் உள்ளவாறறிந்து நட்புக் கொள்ள வேண்டும் என்றார்.
வ்வளவு ஆய்வு செய்ய வேண்டுமானால், அதுவே நட்பாகி விடாதா?' என்று எண்ணத் தோன்றும்.
ஆய்வு மூளையின் பகுதி; நட்பு உள்ளத்தின் பகுதி. மூளைப் பகுதியின் ஆய்வு, கொள்வதைக் கொள்ளவும், தள்வதைத் தள்ளவும் வல்லது. ஆனால், அது உள்ளப்படிவு ஆகிவிடின் தள்ளுவது அரிதாகப் போகிவிடும்.
வ
பெண்ணுக்கு மாப்பிள்ளையையும், மாப்பிள்ளைக்குப் பெண்ணையும் எத்தனை, எத்தனை வழிகளில் வகைகளில் எல்லாம் ஆய்கின்றனர். ஆயும் இ மெல்லாம் தேர்ந்தெடுத்த இடங்களாகி விடுகின்றனவா?
கண்டதும் காதல் என்பது பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகின்றது. எப்படியோ பொறுத்துக் கொண்டு பிரியாமல் வாழ்ந்தாலும், வாழ்க்கை என்னவோ இருபாலும் தோல்வி போலவே உணரப்பட்டு விடுகின்றது. அதுபோல் கண்டதும் நட்பு என்பதும் அப்படிப் பட்டதேயாம்.
தாய்க்கு எவள் தோழியாக இருந்தாளோ அவள் மகளே மகளுக்குத் தோழி என்னும் மரபைத் தமிழ் இலக்கிய உலகம் பண்டே கொண்டிருந்தமை பழகிய நட்பாம் 'பழைமை மாண்பு கருதியே போலும்!
ம
ஒருவனை நண்பனாகக் கொள்ளவேண்டின், அவனொடு சேர்ந்து இருப்பவரையும் ஆராய வேண்டுமா? வேண்டும். ஏனெனில், அவர்கள் இயல்பு பலவகையாலும் ஒத்துப் போவ தால்தானே சேர்ந்துள்ளனர்! அச்சேர்க்கை நல்லதா, கெட்டதா