226
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
என்பதை அறியாவிடின் பெருந்தீமை ஏற்படலாமே! வலிய கூட்டத்தின் இடையே அது மாறுபட்டதெனின், தான் மாட்டிக் கொண்டு மீள முடியாதே!
நாணம் என்பது மாந்தர்க்குரிய தனிப்பெருந்தன்மை; அத்தன்மையுடையான் ஓரொருகால் தவறினும் தன் செயலுக்குத் தானே நாணி மீளவும் அச் செயலைச் செய்யான். நாணம் என்னும் நல்ல பண்பு இல்லான் எனின் அவனுக்குப் புகழ் என்ன? பழி என்ன? நல்லது என்ன? அல்லது என்ன? அழுக்குப் படிந்த சுவருக்கு மேலே பட்ட அழுக்கு புது வண்ணந் தீட்டியதாகத் தானே போகும்? "தோலுக்கு மேலே தொண்ணூறு அடி; துடைத்துப் பார்த்தேன் ஒன்றுமில்லை" என்பார்க்கு நாணுதல் உண்டா? நாணார் நட்பு, நாணா இழிமைதானே தரும்.
வருந்துமாறு உரைத்தல் நண்பர் செயல் அன்று; திருந்து மாறு உரைத்தலே நண்பர் செயலாகும். அந்நிலையில் மெல்லென உருகி நின்று உள்ளந்தொட உரைத்தல் ஒருநிலை. அதற்கு இசைந்து வழிப்பட்டு வாராக்கால், கடுமையாக இடித்துரைத்தல் ஒரு வகை. பூச்சு மருந்தால் சீராகாது புரையோடிப் போன புண்ணை, அறுவையால் ஆற்றுவது இல்லையா? அத்தகையது அது.
சான்றோர் வழக்கத்தைச் சார்ந்து நடத்தல் வேண்டும் என்பதைப் பன்முறை வலியுறுத்துவார் வள்ளுவர்.
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல்”
"உலகந் தழீஇயது ஒட்பம்
“எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு’’
இவை அவற்றுள் சில. உலக நடைக்கு ஓர் அளவு கோல் வேண்டுமே. அதற்காகவே உயர்ந்தோரை-உயர்ந்தோர் நடையை -அளவு கோல் ஆக்கினார். அதுவே வழக்கறிதல் என்பதாம்.
“அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்”
என்பதில் (795) இறுதி மூன்று ஆய்வுகளையும் குறித்துளார். சல்வக் காலை வாராமல், அல்லல் காலை வந்த பிசிராந்தையார் போலும் நண்பர் கோடியுள் ஒருவர் ஆகலாம். நீர் வற்றிய காலை நீருள்ள குளத்தைத் தேடும் கொக்கு குருவி