―
திருக்குறள் ஆராய்ச்சி 1
227
களைப் போல்வார்தாமே! உலகில் மிகப்பலர், அத்தகையர். உறவு போல் இருந்து உரிய பொழுதில் விலகிச் செல்வதிலும் தீதில்லை; நன்மையே என்னும் தெளிவினைக் காட்டுகிறார் வள்ளுவர்.
வறுமை வருகின்றதா? சிக்கல் உண்டாகின்றதா? அவற் றால் கேடு இல்லை. ஒரு நன்மையும் உண்டு. அப்பொழுதிலும் உண்மையாக இருக்கும் நண்பர் எவர் என்பதை அளவிட்டுக் காட்டும் அளவுகோல் அப்பொழுதேயாம் (796).
“கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்”
என்பது அது.
செல்வச் செழிப்புள்ளபோது கூடிக் குலாவிய கூட்டம், என்ன ஆயது?
பதவி வாய்ப்பிலே இருந்தபோது பளிச்சிட்ட கூட்டம், என்ன ஆயது?
என்று அமைந்திருந்து எண்ணுவார், வள்ளுவர் வாழ்வியல் நுட்பம் தெளிந்து வழிகாட்டியாக உலகுக்கு இருப்பார்.
போவார் போக, போக்க வேண்டியவர் எவர் என்பதையும் நயமாகத் தெளிவாக்குவார் வள்ளுவர். இழப்பிலே உண்டாகும் நன்மை இது என்ற வள்ளுவர் இழக்கச் செய்வதே ஊதியம் என மேலும் நயமாக உரைக்கிறார். அது,
“ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்"
என்பது (797).
அறிவிலி ஒருவன், அறிவுடையான் வேலைக்குத்தக்கவ னாகான். அவன் செயல், அறிவாளன் வேலையையும் கெடுப்ப தாகவே அமையும். ஆனால் அறிவிலி ஒருவன் நண்பனாக அமைந்தால் அவ்வினைக் கேட்டினும் பெருங் கேட்டை - உயிர்க் கேட்டைக் கூட-அறிவிலி ஆக்கி விடுவான். ஆதலால், பேதை யின் கேண்மையை விலக்குதல் பொருள் ஊதியம் மட்டும் அன்று; உயிர் ஊதியமும் ஆகும்.
ய