―
திருக்குறள் ஆராய்ச்சி 1
237
எளிமையில் கண்டுகொள்ள முடியாதது. ஆதலால் நூலறிவாளர் என்பதற்காக ஒருவரை நம்பும் நண்பராக்கிக் கொள்ளலும் ஆகாது.
“பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது
(823)
முகத்துக்கு முகம் கண்ணாடி என்பது பழமொழி. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதும் பழமொழியே. அகத்தின் கண்ணாடி முகமே' என்பது வள்ளுவம். எனினும் அகக் குறிப்பு முகத்தில் புலப்படா வண்ணமாய் மறைத்துக் கொள்ள வல்லாரும் உளர். அதனால்,
"முகத்தின் இனிய நகாஅ, அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்’
என்றார் வள்ளுவர் (824)
நெஞ்சு நஞ்சாக இருந்தாலும் வாய் கரும்பாக இருப்பார் ளர். அவர் சொல்லும் சொல் தேனாறாகத் தித்திக்கும்!
66
"இவர் தோழமை உடையேன்! யேன்! இனி எனக்கென்ன?' என்னும் பெருமிதத்தைக் கூடத் தந்து விடும். அதனால் சொல் லளவில் நம்பி விடுதல் நல்லது ஆகாது என்பதை மூன்று குறள்களில் வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்.
உள்ளத்தால் பொருந்தாதவரை அவர் சொல்லைக் கொண்டு சிறிது அளவு கூட நம்புதல் ஆகாது (825) என்கிறார்.
பகையாயினாரும் சொல்லால் உறவாகிச் செயலால் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளல் உண்டு என்பதைச் சுட்டிக் காட்டி எச்சரிக்கிறார்.
நட்டார் போல் நல்லவை சொல்வதை நம்பாதே! ஒட்டார் ஒட்டாரே என்கிறார் (826).
பணிந்த சொல்லராகப் பளிச்சிட்டுத் தோன்றுவார் உளர். அவர் பணிவுச் சொல்லை நம்பிப் பாழாகி விடாதே. பகைவன் கையில் உள்ள வில் வளைந்து தாழ்கிறதே ஏன்? குறிபார்த்து அடிக்கத்தானே ளைகின்றது. இவன் இவன் சொல் வணக்கம், பகைவன் கையில் வில்வணக்கமே என அறி என்கிறார் (827).
“சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்”