உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம் 6

வில்லாக வளைந்து, காலைத் தொட்டு வணங்கியவள் இடுப்பில் இருந்த குண்டு வெடித்துப் பட்டோரும், ஒட்டி யிருந்தோரும் தனித்தனி உறுப்புச் சிதைவுகளாக ஆயினமை இவ்வாண்டு (1991)த் திருப்பெரும்புதூர் நிகழ்ச்சி.

'கும்பிட்ட கையுள்ளும் கொல்படையுண்டு' என்றும், ‘பகை நெஞ்சர் அழுத கண்ணீரும் அழிக்கும் படையாம் என்றும் கைக்கருவியையும், கண்ணீர்க் கருவியையும் ஒருங்கே. சுட்டினார் வள்ளுவர்.

“தொழுதகை யுள்ளும்ள படைஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து

என்பது அது (828).

பன்முறை போரில் தோற்றோடிய முத்தநாதன், மெய்ப் பொருளார் என்னும் சிவனடியாரை வஞ்சத்தால் வெல்ல எண்ணினான். அவர் கொண்ட சிவக்கோலத்தையே கொண்டு அடியார் போலவே போய் அருளுரைப்பது போல் காட்டி, அவர் கண்ணை மூடிக் கை குவித்துக் கொண்டிருந்த போதில், ஏட்டுச் சுவடிபோல் மறைத்துச் சென்ற குத்து வாளால் குத்தித் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான். தொழுத கையில் படை ஒடுங்கும் என்பதை மெய்ப்பிப்பது இது! தொழுத கையை உ உடையவரைத் தொழப்பட்ட கையை உடையவர் வஞ்சத்தால் வீழ்த்திய வகை இது! இது பெரிய புராணச் செய்தி.

இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட இன்னா செய்யாமைக் கொள்கை அண்ணல் காந்தியாரைக் கோட்சே (கொடுசேய் என்பார் வ. சுப. மாணிக்கர்) தொழுது கொண்டே கைத் துமுக்கியால் (துப்பாக்கியால்) சுட்டு வீழ்த்திய வரலாற்றுச் செய்தி உலகம் அறிந்தது. தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளைக் கண்டு கொண்டுதான் உள்ளது உலகம்! தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டும் தான் இருக்கிறது.

அன்பு என்னும் அரும் பண்பை மறைத்து வைக்க இயலாது. அன்புடையார் கண்ணீரே அவர்தம் அன்புடமையைக் காட்டி

விடும் என்பது வள்ளுவம். ஆனால், கண்ணீராலேயே அழித்து விடும் கேடரும் உலகில் இல்லாமல் இல்லை என்பதைக் காட்டுவதே, ன்னார் (பகைவர்) அழுத கண்ணீரும் அனைத்து” என்பது.

66