தொழில்
12. நல்ல தொழிலராக
தொழில் என்னும் சொல் திருக்குறளில் பல இடங்களில் ஆளப் பெற்றுள்ளது. அவை பெரும்பாலும் கடமை என்னும் பொருளிலேயே வழங்கப்பட்டுள்ளன.
புலவர் தொழில் (394) அறிவார் தொழில் (428) வேந்தன் தொழில் (549; 582) ஆளும் தொழில் (1252) என்பன அவை.
செய்தொழில் என்பதிலும் (972), அறுதொழிலோர் என்பதிலும் (560) வேலை என்னும் பொருளிலே வழங்கி யுள்ளார் திருவள்ளுவர்.
பேதை தொழில் என்பதில் (833) இயல்பு என்னும் பொருளில் வழங்கியுள்ளார்.
உழவு என்னும் அதிகாரம் இருப்பினும், ஆங்குத் தொழில் என்னும் சொல் இடம் பெறவில்லை.
-
நெசவு
வள்ளுவர் அறுதொழில் என்பது (560), உழவு அமைச்சு - அரசு ஓதல் -வாணிகம் என்பன என்பது. இனி, “உழவு தொழிலே வரைவு வாணிகம்
விச்சை சிற்பம் என்றித் திறத்தறு தொழில்”
என்று திவாகரம் அறுதொழில் இவையெனக் கூறும்.
-
ர்
சிறு தொழில் -பெருந்தொழில் குடிசைத் தொழில் - ஆலைத் தொழில் எனத் தொழில் இந்நாளில் பெருவழக்காக உள்ளது. தொழிலமைப்புகள் போலவே தொழிலாளர் அமைப்புகளும் பெருகியுள்ளன. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்னும் முழக்கம் எழுந்து, உலகில் பல நாடுகள் தொழில்வள நாடுகளாகச் சிறந்து விளங்குகின்றன. அலுவலும் தொழிலும்
பெரும்பான்மை மூளையுழைப்பும் பெரும்பான்மை உடலுழைப்பும் கருதிப் பகுத்தலால் முறையே அவை அலுவல்