244
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
எனவும், தொழில் எனவும் உலகியலில் சொல்லப்படுகின்றன. மூளையும் உடலும் ஆகிய இரண்டுமே இரு வகைப் பணிக்கும் வேண்டும். எனினும் மிகுதி பற்றிய பகுப்பே இஃதாம்.
உடல்
உடல் உழைப்புக்கு மூலப் பொருளாக இருப்பது உடல் நலமே. ஆதலால் உடல் என்பதற்கு 'முதல்' என்னும் பெய ரொன்றை நம் முன்னோர் தந்துள்ளனர். ‘முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை' என்பது தெளிவு. ஆதலால் உடல் உழைப் பாளர் மிகச் சரியாகப் போற்றிக் கொள்ள வேண்டியது உடல் நலமே ஆகும்.
பொருளால் பொருள் தேடல் எளிது; சிக்கல் இல்லாதது; செலவும் இல்லாதது. எத்தனை வகைகளில் எனினும் தேட வாய்ப்பது.
உடலால் பொருள் தேடுதல் எளிதன்று; சிக்கலும் உடையது; செலவும் மிக்கது; ஒரே ஒரு வழியிலேயே பொருள் தேட வாய்ப்பது.
இவ்வேறுபாட்டைத் தெரிந்து கொண்டால் உடல் உழைப் பாளர் அல்லது தொழிலாளர் தம் உடலைக் கெடுக்கும் எத்தீய பழக்கத்தையும் கைக்கொள்ளல் ஆகாது.
பணத்தைப் பத்து வகைகளில் ஈடுபத்தி ஈட்டலாம். உடலை ஓரிடத்துக் கொண்டுதானே ஈட்டலாம்.
பணத்தினை ஈடுபடுத்துதலில் அதற்குத் தேய்மானம்
இல்லை.
லை ஈடுபடுத்துதலில் தேய்மானம் உண்டு; ஊட்ட உணவும், ஓய்வும், மருத்துவமும் பிறவும் கட்டாயம் வேண்டியவை. பணத்தை ஈடுபடுத்துதற்குப் பகல் இரவு, மழை பனி, விடிவு, முடிவு எனக் கால வரையறை இல்லை.
உடலை ஈடுபடுத்தி உழைப்பவர்க்கு இவ்வெல்லாம் உண்டு. ஆதலால் பண முதற்செல்வரைக் காட்டிலும், உடல் முதல் தொழிலாளர் உடல் நலம் போற்றிக் கொள்வதுடன், உடல் வளம் கெடுக்கும் செயல்களில் ஈடுபடுதலும் ஆகாது.