246
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
அளவிலும் தொழிலாளர் அளவில் மிகப் பெருகியுள்ளன. அவர்கள் வருவாயைப் பாழாக்குவதுடன் வருவாய்க்கு மூலமாம் உடலையும் பாழாக்கிக் குடும்பத்தையும் சீரழித்துச் சிறுமை யாக்குகின்றன.
குடி வகை ஒன்றா இரண்டா?
தேநீர், குளம்பி (காபி) என்பன நாகரிகக் குடிகள் ஆகி விட்டன. அவற்றைக் ‘குடி' எனக் கருதி ஒழிப்பார் ஆயிரத்தில் ஒருவர் இருத்தலும் அருமையே!
பீடி, சுருட்டு, வெண்சுருட்டு. கஞ்சா என்னும் புகைக் குடியில் ஈடுபட்டு நெஞ்சாங் குலையைச் சுட்டுக் கொண்டு, கட்டுக் குலைந்து இருமலுக்கும் - ஈளைக்கும் - ஈரற்குலை அழற் சிக்கும் இறையாவோர் எண்ணிக்கைக்கு அளவே இல்லை.
-பீரே
இனிக் கள்ளே - சாராயமே - பீரே பிராந்தியே - ஒயினே என எரியக் குடிகளிலே ஈடுபடுதல் இழிவு என்பது இல்லாமல் பெருமை என்று எண்ணிக் கொண்டு குடிப்பதும் நாட்டில் இயல்பாகி விட்டது. தொழிலாளரிடத்தும் தம் கைப் பொரு ளுக்குத் தக்க குடியைக் குடித்துக் குடியைக் கெடுக்கும் கொடுமை புற்றுநோயெனப் பற்றிக் கொண்டதாயிற்று. அதற்குக் கள் மதுவும், கடை மதுவும், மலிவு மதுவும் போட்டியிட அரசும் துணை போகின்றது.
இக்குடி கேடு என்பது தெரியாமலா குடிக்கிறார்கள் விற்கிறார்கள்? விற்கவும் - குடிக்கவும் - இசைவுரிமை தருகிறார்கள்? கடை வாயிலிலேயேயும், புட்டியிலேயும், பெட்டியிலேயும் “குடி குடியைக் கெடுக்கும்” என்று எழுதிப் போட்டுக் கொண்டு, கேட்டைத் தெரிந்து கொண்டே கொடுக்கிறார்கள்! தெரிந்து கொண்டே குடிக்கிறார்கள்!
ஒரு சிறுவன்; ஒரு தாளை எடுத்தான்; மிசைப் பலகைக்குக் கீழ் போட்டுத் தீ வைத்தான். அவன் தந்தையார் அதனைப் பார்த்தார்.
'என்னடா செய்கிறாய்? தாளைப் பலகைப் பக்கம் போட்டு எரித்தால் பலகை எரியாதா? அதிலுள்ள ாருள்கள் எரியாவா? பக்கமெல்லாம் பற்றி எரியாவா?' என்றார்.
'எரியட்டும் என்றுதான் எரிக்கிறேன்' என்றான் சிறுவன்.
'எரியட்டும் என்று எரிக்கிறாயா? என்ன முட்டாள் தனம்’ என்றார் தந்தையார்.