―
திருக்குறள் ஆராய்ச்சி - 1
247
'சின்னவர்கள் செய்தால் முட்டாள்தனம். பெரியவர்கள் செய்தால் அறிவாளித்தனமோ?' என்றான் சிறுவன்.
‘என்ன சொல்கிறாய்?' என்றார் தந்தை.
66
குடித்தால் குடலை எரிக்கும்; உடலை அழிக்கும்; உயிரைப் போக்கும்; குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும்;” என்பவற்றைத் தெரியாமலா நீங்கள் குடிக்கிறீர்கள். தெரிந்து கொண்டுதானே குடிக்கிறீர்கள். அதனால் தெரிந்து கொண்டுதான் நானும் எரிக்கிறேன்' என்றான்.
குடிப்பவர்கள் அதன் கேட்டைத் தெரியாமலா குடிக்கி றார்கள்? மனைவியும் மக்களும் இப்படிச் செய்யலாமா என்று கேட்டால் அவர்களுக்கும் குடியைப் பழக்கி ஒரேயடியாகக் குடிகெடுக்கும் குடும்பங்களும் இல்லாமலும் இல்லையே! குடியறியாக் குடும்பப் பெண்களும் கூடக் குடிக்கும் சிறுமைக்கு ஆட்படுவதைக் கண்டு இந்நாட்டுக்கு உய்வு உண்டோ? என்று ஏக்கமே உண்டாகின்றது.
உடல் நலம் காக்கக் கட்டாயம் அமைந்த உழைப்பாளர்- தாழிலாளர்-இவ்வழியில் இருந்து விடுபட்டுப் பிறர்க்கு வழிகாட்டியாக அமையும் நாளே நன்னாளாம்.
வள்ளுவத்தில், கள்ளுண்ணாமை என்பதோர் அதிகாரம். அதனை உணர்ந்து கற்றார் எவரும், கட்டாயம் குடியைக் கருதார். அவ்வாறு வெறுத்தும் கூறுகிறார் வள்ளுவர்.
-
இடித்தும்
-
நயந்தும்
எப்பொழுதும் குடியில் பேரார்வம் கொண்டிருப்பவர் இழிவுக்கு அஞ்சார்; மதிப்பை இழந்து விடுவார் (921).
மயக்கும் குடியைக் குடித்தல் வேண்டா; குடிக்க வேண்டும் எனின் குடிக்க; குடிப்பாரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கொள்ளார் (922).
பிறரைச் சொல்வானேன்? பெற்றவள் முகத்திலும் வெறுப்பை உண்டாக்குவது குடியாகும். அத்தகு சிறுமையது அது (923).
மதுக்குடிஎன்னும் குடும்ப நலம் பேணாத குற்றம் உடையவர் முன்னர், நாணம் என்று சொல்லப்படும் நல்லவள் நில்லாமல் புறங்காட்டி ஓடிப் போய் விடுவாள் (924).