248
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
கைப்பொருளைக் கொடுத்து நல்லுணர்வை எல்லாம் அழித்துக் கொள்ளும் இது, எத்தகு அறியாமைச் செயல்? (925).
உறங்கினவர் என்பவர் அப்பொழுதில் இறந்தவர்க்கு வேறானவர் அல்லர். அவ்வாறே எப்பொழுதும் குடித்து மயங்குபவர்க்கும் நஞ்சுண்பவர்க்கும் வேறுபாடு இல்லை (926). எப்போதும் குடித்தும் படுத்துக் கிடப்பவர் ஊரவர் அனைவராலும் அறியப்பட்டு நகைப்புக்கு இடமாவர் (927).
குடித்தவன் ‘குடித்திலேன்' என்று கூறுவது மெய்யாகி விடாது. அவன் ஒளித்து வைத்துள்ள செய்திகளை எல்லாம் தானே உளறிக் கொட்டி விடுவான் (928).
குடித்து மயங்கிக் கிடப்பவனுக்கு அப்பொழுதில் அறி வுரை கூறித் திருந்த முயலுதல் ஆழமான நீருள் மூழ்கியவனைத் தேடுதற்குத் தீப்பந்தம் கொண்டு போவது போல் பயனற்றுப் போகும்.
66
'களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று
99
(929)
ஒரு குடியன் தான் குடியாத போதில், குடித்த குடியனைக் கண்ட ாவது நானும் குடித்த போதில் இப்படித் தானே இருந் திப்பேன் என்றும் எண்ண மாட்டானோ? எண்ணினான் எனில் குடியை விட்டொழித்திருப்பானே!
சூது
“கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான் கொல் உண்டதன் சோர்வு
(930)
உள்ளத்தை மயக்கிக் கெடுப்பதில் மதுவுக்குச் சற்றும் குறைந்தது ஆகாது சூது. அதனால் கள்ளுண்ணாமையை அடுத்துச் சூது என்றோர் அதிகாரம் வைத்தார் திருவள்ளுவர்.
சூழ்ச்சியால் பொருள் பறிப்பது சூழ்து. அது ‘சூது” என நின்றது. 'போழ்து' என்பது ‘போது' என ஆவது போன்றது அது.
சூதால் கெட்டழிந்த நாடுகளும் குடிகளும் எண்ணித் தொலையா. ஊரெல்லாம் உரக்க முழங்கப்படும் ‘தருமன்’ கதை என்ன? 'நளன்' கதை என்ன?