திருக்குறள் ஆராய்ச்சி
―
1
259
என்பது உண்டு. தன் முயற்சியின் வெற்றியால் பலர்க்கும் உதவுதலே அவன் அடிப்படைக் கருத்தாக இருக்கும். அதனால்,
66
'தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு”
என்கிறது வள்ளுவம் (613)
L
பிறர்க்கு உதவுதல் என்னும் பெருமிதம், இடைவிடா முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த தன்மையிலேயே அடங்கி யுள்ளது என்கிறது அது.
முயற்சி இல்லாதவன் பிறர்க்கு உதவியாக இருக்க முடியுமோ? தனக்குமே உதவியாக இருக்க முடியாத அவன் பிறர்க்கு உதவியாக இருப்பது கனவிலும் இயலாது. கருவிப் போர்ப் பயிற்சியே இல்லாத ஒருவன் கையில் வாளை எடுத்துக் கொண்டு சுழற்றினால் என்ன ஆகும்? அவன் தோளையும் தலையையும் அவனே வெட்டிப் பதம்பார்த்துக் கொள்வானே அல்லாமல் வேறு என்ன செய்து விடுவான்? என காட்டுகிறார் வள்ளுவர்.
“தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்’
என்பது அது (614)
உவமை
வேலை நெருக்கடி! அதே பொழுதில் ஊரிலோ வீட்டிலோ விழாக் கோலம்! பணியழுத்தம்! அதே பொழுதில் பளிச்சிடும் காட்சியழைப்புகள், விருந்துக் கோலங்கள்!
உ
அசையாத உறுதியையும் அசைக்கும் ஆர்வச்சூழல். தூண்டும் இன்ப அழைப்புக்குச் செல்வதா? வேண்டும் தொழில் அழைப்புக்குச் செல்வதா? குடிநலம் காக்க விரும்புவான் எதனை முடிவு செய்வான்?
"இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயலாற்றுதலை விரும்புபவன் எவனோ அவன், தன் உறவினர் துன்பத்தை அகற்றி நிலை பெறத் தாங்கும் தூண் போன்றவன் ஆவான்.