260
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
முயற்சியே செல்வம்; முயலாமையே வறுமை
சோம்பலே முக்காட்டாள், சுறுசுறுப்பே திருமகள்
(616)
(617)
திரைப்பட நடிகை ஒருவர் சுதாசந்திரன் என்பார். மயூரி என்னும் திரைப்படத்தில் நடித்தவர். ஆடல் பழகி அரங்கேற்றமும் நிகழ்ந்த அவர், கால் ஒன்றை இழந்தார். இனி ஆடமுடியுமா? முடியும் என முடிவு எடுத்தார். செயற்கைக் கால் பொருத்தப் பட்டுப் பயிற்சியைத் தொடர்ந்தார். குருதி ஒழுக்கா, வலித் தாக்கமா? ஊக்கம் இழந்தார் அல்லர். பெற்றோர் உருகி நின்றனர்! அவர் உருக்கமாக நின்று பயின்றார். அரங்கேறி ஆடல் ஒழிந்து பதின்மூன்று ஆண்டுகளின் பின்னே மீண்டும் ஆடல் அரங்கேறினார். ஆட்டம் பிசிறு தட்டவில்லை. பிழை பட்டது இல்லை! பெற்ற தந்தை அக்காலைப் பற்றிக் கொண்டு கண்ணீருடன் வணங்கினார்! அவர் காலையா? இல்லை! அந்த அயரா ஊக்கத்தை!
மீண்டும் ஆடிய அன்று குவிந்த தொகை ஐந்து நூறாயிரம். அதனை வைப்பு நிதியாக்கிக் கால் இழந்தோர்க்கு இலவயமாகக் கால் பொருத்துதற்குத் திட்டப் படுத்தினார்.
“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி”
எடுத்துக் கொண்ட செயலை நிறைவேற்ற இயற்கையே தடையாக நிற்கலாம். மழையென்ன, வெயிலென்ன, வெள்ள மென்ன, தீயென்ன எத்தனை தடைகள்! அப்படித் தடை கண்டு துவள்வதானால் சப்பானியர் வாழ முடியுமா? நில நடுக்கமும்
எரிமலைக் கக்கலும் அவர்களுக்கு உள்ளது போல் எந்
நாட்டவர்க்கு உண்டு. அவர்கள் அவற்றுக்காக நாட்டை விட்ட னரா? தொழிலை விட்டனரா? இரக்க மில்லாமல் அணுக் குண்டு வீழ்த்தி அழிவு சூழ்ந்தாலும் 'விட்டோமா' என்று உலகம் வியக்க நிமிர்ந்து நிற்கும் அவர்கள் நிலை எத்தகைய வீறுமிக்கது!
“தெய்வத்ததான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
66
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’
என்பவை ஆள்வினை வள்ளுவங்கள் (619, 620)