உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி 1

13

ஊற்று நீர்

ஆற்றுப் பெருக்குள்ள காலம் ஒன்று; ஆற்றுப் பெருக்கு அற்றுப் போன காலம் மற்றொன்று; ஆற்றுப் பெருக்கு அற்றுப் போனதென நீர்வளம் கொள்ள விரும்புவார் கையைக் கட்டிக் கொண்டு இருப்பரோ? இருப்பின் அவரினும் மடவர்தாம் எவர்?

6

நீர்வளம் கொள்ள விரும்புவார் ஆற்று மணலைத் தோண்டி ஊற்று வழியால் நீர்வளம் கொள்வதுதானே கண்கூடான காட்சி. அவ்வாறே உரிய பருவத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு இழந்து போய் விட்டாலும்கூட அறிவுடையோர் கூறு வனவற்றைக் கேட்டேனும் அப்பேரிழப்பை ஓரளவால் குறைத்துக் கல்விப் பயன் பெறலாமே என உவமை வழியாகக் கூறுகிறார் வள்ளுவர்.

வாய்ச்சுவை

இன்னொரு காட்சியையும் கருதுகிறார் வள்ளுவர் “வாய்க்குச் சுவை இங்கே கிடைக்குமா? அங்கே கிடைக்குமா? எங்கெங்கெல்லாம் எவ்வெச்சுவை கிடைக்கும்?” என்று தேடித் தேடித் திரிகின்றார்களே! இவ்வாறு, செவிக்குச் சுவை எங்கெங்கு கிடைக்கும் என்று தேடித் திரிய வேண்டாவா? அப்படித் தேடித் திரிபவர் அல்லரோ கேள்விச் சுவை அறிந்த அறிவு விரும்பியவர் என்கிறார் (413)

செவிச்சுவை

அப்படித் தேடித் திரியும் அறிவு விரும்பியர்க்குச் சுவை சுவையாய் வகை வகையாய் விருந்துணவே -விழா உணவே - கிடைத்தாலும்கூட அவற்றைப் பெற ஓடித் திரிவரோ? மாட்டார்! அவர் விரும்பும் செவிச்சுவை கிடைத்தற்கு இல்லாத பொழுதில் சிறிய அளவிலே வாய்ச்சுவையை விரும்பிச் செல்வர். னெனில், செவிச்சுவை என்பன எட்டு அல்லவோ? நாச்சுவை என்பன ஆறுதானே! அச்சுவை தானும் ஆறிப் போனால் அற்றுப் போகுமே! அன்றியும் மீண்டும் உண்டால்தானே அச்சுவை உண்டாம்? கேள்விச் சுவை போல நினைக்கும் போதெல்லாம் இனியாதே! என நீள எண்ணுகிறார் வள்ளுவர் (412) இருப்பா? இறப்பா?

'வாய்ச்சுவை வாய்க்குமா, வாய்க்குமா என்று தேடித் திரிந்து கொண்டு, செவிச் சுவைக்கு வாய்ப்பு இருந்தும் செவிக்