உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம் 6

கொள்ளாமல், விலங்கோடு விலங்காக இருக்கும் மக்கள், உயிரோடு இருந்தால்தான் என்ன? இறந்து போனால்தான் என்ன? ஒன்றுதான்' (420) என எண்ணுகிறார்.

66

அருமை மிக்க மாந்தப் பிறவியை அடைந்தும், அப் பிறவிக் குரிய செயலைச் செய்யாமல், விலங்காக வாழும் வாழ்வு ஒரு வாழ்வா?” என்னும் ஏக்கத்தில் பிறந்த சொல் இது! இவ்வாறு இடித்துக் கூறினாலேனும், இழந்த காலம் போக, இருக்கும் காலத்தளவிலாவது கேள்விச் செல்வம் பெற மாட்டாரா? என்னும் பேரெண்ணமே இவ்விடிப் புரையாக வெளிப்பட்ட தாம்.

செவிச்செல்வம்

வழியிலே கிடைக்கும் செவிச் செல்வத்தை விடக் கூடாது என்றால், வகுப்பிலே கிடைக்கும் செவிச் செல்வத்தை நல்ல மாணவர் விடலாமா? சருக்கரைப் புலவர் என்பார் ஒருவர். அவர் பேசும் அவையிலே கூறுவதுண்டு. “நான் பேசுவதைக் காசு காடுத்துக் கேட்க வேண்டும் என்பது ல்லை! காது கொடுத்துக் கேட்டால் போதும்" என்பார். காது கொடுத்துக் கேட்பது என்ன கடினமானதா? எனத் தோன்றும். ஆனால், அவைகளில் பேசுபவர் எவர்? கேட்பவர் எவர்? என்று கண்டு கொள்ள முடியாவகையில் பேசுவார் இலரா? ‘நீங்கள் பேச்சை நிறுத்துகிறீர்களா? நான் பேச்சை நிறுத்தவா?' என்று வினாவும் பொழிலாளர் இலரா? அதனால் தான் 'செவியை வாயாகவும் நெஞ்சை வயிறாகவும் கொண்டு கேள்வியாம் உணவை விருப்பத் தோடு உண்ண வேண்டும்' என்றனர். (நன்னூல் 50). ஒருமுகக் கேள்வியர்

விவேகானந்தரின் இளமைப் பெயர் நரேந்திரன் என்பது. அவர் வகுப்பில் பாடங்கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கண்கள் மூடியிருந்தன. அசைவு இல்லாமல் அமர்ந்திருந்தார். அவர் உறங்குகிறார் என ஆசிரியர் எண்ணி விட்டார். 'வகுப்பில் பாடம் கற்பிக்கும் போது கண்ணுறக்கமா? என்று கண்டித்தார் ஆசிரியர். ‘உறங்கவில்லை; உங்கள் பாடத்தை ஒன்று விடாமல் கேட்க வேண்டும் என்று கண்ணை மூடிக் கொண்டு ஒருமுக மாகக் கேட்டேன்' என்றதுமன்றி, அன்று ஆசிரியர் கற்பித்த எல்லாச் செய்திகளையும் ஒன்று விடாமல் கூறினார். ஆசிரியரும் மாணவர்களும் வியப்புற்றனர்; நரேந்திரரின் அவ்விளமைப்