―
திருக்குறள் ஆராய்ச்சி 1
15
பயிற்சி பின்னே எப்படி விரிந்தது? நாளொன்றுக்குப் பத்தாயிரம் பக்கமும் படிக்க உதவிற்று!
தமிழகத்துப் பொன்விளைந்த களத்தூரில் பிறந்த ஒருவர் வீரராகவர் அவர் பிறவியிலேயே கண்ணொளி இல்லாதவர். அவர் பெருமிதத்துடன் கூறுகிறார். 'ஏடு ஆயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த அறிவாளன்; இமயமுதல் சேதுநாடு வரை இணையில்லாப் படிப்பாளன்' என்பது அது அவ்வாறே பழனி மாம்பழக்கவிச் சிங்க நாவலர், திருக்குறள் எண்வகை நினைவுக்கலை ஏந்தல் இராமையனார் போன்றவர்கள் கேள்விச் செல்வமே செல்வமாய்ப் புலமையில் தலைநின்ற பெருமக்கள் ஆவர்.
மணித்துளியுள் மணி
இத்தகைய உலகியல் கண்டமையால் வள்ளுவர் ‘எவ்வளவு சிறிய அளவு என்றாலும் குறைவில்லை. அச்சிறிய அளவுக் கேள்வியும் பெரிய பயனைச் செய்துவிடும்' (416) என்றார். மணிக்கணக்காகக் கேட்டால் மட்டும் தான் பயனா? மணித்துளி அளவில் கேட்ட மணியான கருத்து ஒன்று, ஆழமாகப் பதிந்து விட்டால், பதியப் பெற்றவனை அது மணியாக்கி விடாதா? கடப்பாறைக்கம்பி
கடப்பாறைக் கம்பியைப் பாறையில் தேய்த்துக் கொண் டிருந்தாள் பாட்டி. ‘ஏன் தேய்க்கிறாய்?” எனக் கேட்டான் பேரன் ஒரு குடைக்கம்பி வேண்டும் அதற்காக' என்றாள் பாட்டி. 'குடைக்கம்பிக்காகக் கடப்பாறைக் கம்பியைத் தேய்க்க வேண்டுமா? தேய்க்க என்ன பாடு?' என்றான் பேரன் ‘தேய்த்துக் காட்டுகிறேன்' என்றாள் பாட்டி. அப்படியே செய்தாள். செய்த துடன், ‘கடப்பாறைக் கம்பியைத்தேய்த்துக் குடைக் கம்பி செய்ய முடியும் போது, கணக்குப் பாடத்தைத் தானா முயன்று கற்று விட முடியாது? எனப் பேரனைப் பார்த்து வினாவினாள் பாட்டி! பேரன் கணக்கில் கடையனாக இருந்தவன், தலையன் ஆனான்! ஒரு சிறிய கேள்வி எவ்வளவு பெரிய பயனைத் தந்து விடுகின்றது? ஊக்கமுடைமை
வணிகத்தில் நொடித்துப் போன ஒருவர், ஊரை விட்டுக் கிளம்பினார். உள்ளம் அலைக் கழித்தது. தற்கொலைக்கு ஏவியது. போகும் வழியில் ஒரு கூட்டம். பொழிவாளர், “உள்ள