16
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
முதல்களில் எல்லாம் உயரிய முதல் உள்ளமே ஆகும்; உள்ளம் உடைமை, உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்; உடையர் எனப்படுவது ஊக்கம்; தளராத ஊக்கமுடைய வனிடத்துச் செல்வமே தடம் கேட்டு வந்து சேரும்; ஊக்கம் டையவர் ஆக்கம் இழந்தோம் என்று வருந்தார்; வெள்ளம் போலத் துயரம் அடுக்கி வந்தாலும், ஊக்கமுடையவன் உள்ளத் தால் எண்ணிய அளவில் ஒழிந்துபோம்; ஊக்கமே கையில் உள்ள கரையாச் செல்வம்” என்றெல்லாம் திருவள்ளுவர் சொல்லும் ஊக்கமுடைமையை விரித்துரைத்தார். தாம் இழந்தது ஊக்கமே அன்றி ஒன்றும் இல்லை. அவ்வூக்கம் இருந்தால் ஒன்றுக்கு ஒன்பது பங்கு என்ன, ஒன்பதாயிரம் பங்கு தேடலாம் எனத் துணிந்தார். ‘எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின் (666) என்றபடி வெற்றி கண்டார். கேள்விச் சிறப்பல்லவா இது.
ஊன்றுகோல்
கால் வலுவாக இருக்கிறது; உடல் தெம்பாக இருக்கிறது, எனினும் வழுக்கல் நிலத்தில் நடக்கும் போது - நீரும் சேறும் அமைந்த வழுக்கல் நிலத்தில் நடக்கும் போது எத்தகு விழிப் பானவனையும் தெம்பானவனையும் கூட, வழுக்கி விழ வைத்து விடுகின்றது. அந்நிலையில் ஊன்றுகோல் ஒன்று இருந்தால் வழுக்கி விழாமல் காக்கும் அல்லவோ! அதுபோல் வாழ்வில் சோர்வு, தளர்வு, துன்பம், இழப்பு முதலியவை உண்டாகும் நிலையில், உள்ளத்தில் உறுதி மிக்கவர் கூட தளர்ந்து விடுவ துண்டு. அத்தகுநிலையில் நல்லறிஞர் சொல்லி உதவும் சொற்கள் தளர்ச்சி இல்லாமல் காக்கும். (415)
கேள்விப் பயன்
கேள்விச் செல்வம் உடையவர் கேட்டுக் கேட்டுத் தழும் பேறிய பயிற்சியின் முதிர்ச்சியால், பண்பாடு, மிக்கவராகத் திகழ்வர், பணிவும் இனியவை கூறலும், பிறரை மதித்து ஒழுகுதலும் ஆகியவை எல்லாம் தாமாகவே அவரை வந்து அடையும். (419).
நுண்ணிய கேள்விச் செல்வம் உடையவர், எவர் எவ்வாறு கூறினும் அதன் உண்மையை அறிந்து கொள்ளும் திறம் பெறுவார்; பிழையாகவும் ஒன்றை அறிந்து கொள்ள மாட்டார். அறிவிலாவகையில் எந்த ஒன்றைச் சொல்லி விடவும் மாட்டார். (417)