உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கற்றலில் இனம்

இளங்குமரனார் தமிழ்வளம் 6

66

ஆசிரியர் வழியாகக் கற்றுக் கொள்ளும் பாடம் குறித்து நன்னூல் நல்லதொரு செய்தியைக் கூறுகின்றது; ஆசிரியர் உரைத்தவற்றை முழுமையாக வாங்கிக் கொள்ளும் திறம் இருந் தாலும் அதில் கால் பங்கையே பற்றிக் கொள்ள முடியும். தன் னோடு படிக்கும் மாணவர்களுடன் பழகும் வகையால் ஒருகால் பங்கும், கற்றுக் கொண்ட செய்தியைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லும் வகையால் எஞ்சிய அரைப்பங்கும், கூடிக் கல்வி முழுமை பெறும்” என்கிறது அது (44, 45)

அந்நூலில், “உலக வழக்கு செய்யுள் வழக்கு ஆகிய வழக்கு களை அறிதல், பாடத்தை வரப்படுத்தல், ஆசிரியரிடம் கேட்ட வற்றை மீளவும் நினைத்தல், அவற்றில் தெளிவு உண்டாகும் அளவு அவரிடம் மீளவும் கேட்டல், தன்னொத்த மாணவர் களுடன் கூடிப் படித்தல், அவர்களிடம் வினாவுதல் அவர்கள் வினாவுவனவற்றுக்கு மறுமொழி கூறுதல் என்பனவற்றைக்

ம்

மையாகக் கொண்டால் மடமை அகன்றுவிடும்” என்றும் கூறுகிறது (41) இவற்றை அறிந்தால் ‘சேரிடம் அறிந்து சேர’ வேண்டிய கட்டாயம் நன்கு புலப்படும். இனநலம்

திருவள்ளுவர்

66

கிய

ஒருவனுக்கு நல்லவர் கூட்டத்தினும் மேலான துணை எதுவும் இல்லை; அவ்வாறே தீயவர் கூட்டத் தினும் தொல்லைப் படுத்துவதும் இல்லை' என்கிறார் (460). மனத்தூய்மையும் செய்கைத் தூய்மையும் ஆ இரண்டும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் சேரும்” என்றும் (455), மனநலம் நன்றாக வாய்த்திருந்தால்தான் பெருநலமாம் (458) என்றும், தக்கவர்களை நெருங்கி இருக்கும் ஒருவனைப் பகைவரே எனினும் கெடுத்துவிட முடியாது என்றும் கூறுகிறார். “தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்

(446)

தம்மினும் தகுதி வாய்ந்த பெரியவர் தமக்கு வேண்டியவ ராக வாய்ப்பது வலிமைகள் எல்லா வற்றினும் வலிமையாம் (444) என்றும் கூறுகிறார்.

நிலத்தின் தன்மைக்குத் தக்கவாறு நீரின் தன்மையும் மாறிவிடும். அதுபோல் மாந்தர்க்கு அவர்சார்ந்த கூட்டத்திற்குத் தக்கவாறு அறிவு மாறிவிடும் (452) என்றும் எச்சரிக்கிறார்.