உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடி

1 திருக்குறள் ஆராய்ச்சி

19

நன்னிலை அடைய விரும்புவார்க்கு ஆகாத இயல்புகளுள் ஒன்று 'மடி' என்னும் சோம்பலாகும். சோம்பல், சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய இளம் பருவத்திலேயே ஏற்பட்டு விடுமானால் காலமெல்லாம் உண்டாகும் கேட்டைச் சொல்ல வேண்டிய தில்லை. பயன்படுத்தப்படாத இரும்பு என்ன ஆகிறது? அதில் தோன்றிய துருவே அதனை அழித்து விடுகின்றது! அதுபோல் சோம்பல் உடையவனை அழிக்க வேறொன்று வேண்டுவ தில்லை.

குடும்பம் என்பது ஒரு குத்துவிளக்கு என்பர். அவ் விளக்கில் நாள்தோறும் ஒளியேற்றும்போது அதன் திரிகளைத் திருகிக் கருக்குகளை எடுப்பர். இல்லாவிடின் விளக்குத்திரி பற்றாது; எரியாது. அதுபோல் குடும்பம் என்னும் விளக்கிலும் சோம்பல் (மடி) என்னும் கருக்குப் பற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் (601).

மேலும், செயலாற்றுதலில் கால நீட்டிப்பு, மறதி, சோம்பல், மிகுந்த உறக்கம் என்னும் நான்கும், யாம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணுபவர் அணியும் அணிகலங்கள் என்றும் அருமையாகக் கூறுகிறார். சோம்பல் என்னும் குடும் பத்தைச் சேர்ந்தவையே கால நீட்டிப்பு, மறதி, மிகு உறக்கம் என்பவையாம். இவை இளமைப் பருவத்திலேயே வந்து ட்டால், முதுமையில் அவற்றின் கூத்தாட்டம் எப்படி இருக்கும்?

தந்நம்பிக்கை

சோம்பல் கூடாது என்றால் சுறுசுறுப்பு வேண்டும் என்பது தானே பொருள்! சுறுசுறுப்பாக இருப்பவர்க்கும் தந்நம்பிக்கை இல்லாத எவரும் எடுத்த செயலை வெற்றியாக முடிக்க முடியாது. அதனால், 'இச்செயலைச் செய்து முடிக்க எமக்கு முடியுமோ என்று எண்ணித் தளராமை வேண்டும்; அவ்வாறு தளராமை உண்ட ாயின் எடுத்த செயலை முடித் தற்குத் தக்க வலிமையை முயற்சி உண்டாக்கும்' என்கிறார் திருவள்ளுவர் (611)

சொல்வன்மை

கற்பவர்க்கு வேண்டும் திறமைகளில் ஒன்று சொல்வன்மை ஆகும். சொல்லைப் போல வெல்லும் கருவி உலகில் அரிதாகும். சொல்லாற்றலிலேயே உலகப்புகழ் பெற்ற பெருமக்கள் பலராவர்.