உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் 6

வலிய படைக் கருவிகளைக் கொண்டவர்களும் கூட, சொல் வலிமைக்கு ஈடுதர முடியாமல் தோற்றுப் போன வரலாறுகள் எண்ணற்றனவாம். அதனால், 'சொல்வன்மை என்று சொல்லப் படும் நன்மை போல ஒருவர்க்கு உதவும் நன்மை வேறொன்று ல்லை' என்றார் வள்ளுவர் (641)

'சொல்லுதலில்

வல்லமையாளனாகவும்,

சோர்வு இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவனை எவராலும் வெற்றி கொள்ள முடியாது' என்று உறுதியும் கூறினார்.

“சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது”

(647)

அதனால் வெற்றி வாழ்வை விரும்பும் இளையவர் தம் இளமைப் பருவத்திலேயே பெற வேண்டிய பயிற்சிகளுள் ஒன்று சொற் பயிற்சியாகும்.

பயனில சொல்லாமை

சொற் பயிற்சி வேண்டும் என்பதால், எதையாவது எப்படி யாவது பேசிப் பொழுதை வீணடிப்பது அன்று அது. பயனற்ற சொல்லை எதற்காகவும் சொல்லக் கூடாது என்பது வள்ளுவம். சொல்லவே கூடாது என்றால், பயனற்றதைச் செய்யலாமா?

பயனில்லாத சொற்களைச் சொல்பவனை ‘மகன்’ என்று சொல்லுதல் கூடாது. அவன் மக்களுள் ‘பதர்’ ஆவன் என்கிறார் அவர் (196).

மணி இருப்பது நெல்; மணி இல்லாதது பதர்; பதரை எவராவது நெல் என்பாரா? அதுபோல், பயனில்லாதவற்றைச் சொல்பவனை ‘மகன்’ என்று சொல்லுதல் ஆகாது என்கிறார். நீரும் உரமும் கொண்டு நெடுக வளர்ந்து நெல் மணி தராத பதர் போன்றவனே, உண்டு வளர்ந்து உயர்ந்தும் பயனில்லாத சொற் களைச் சொல்லித் திரிபவன்!

தற்செருக்கு

படிப்பவர்க்கு ஆகாத குணங்களுள் ஒன்று ‘செருக்கு' ஆகும். செருக்கு, அறிவின் அடையாளம் அன்று. அறிவின் மையின் அடையாளம் ஆகும். மணிபிடித்த நெற்கதிர் தலை தாழும் அல்லவா! மணியற்ற பதர்தானே நிமிர்ந்து நிற்கும்! அப்பதர் போன்ற தன்மையரே அறிவில்லாச் செருக்கர்.