―
திருக்குறள் ஆராய்ச்சி 1
21
சாக்ரடீசு என்பார் பேரறிஞர்; பெருஞ்சிந்தனையாளர்; அவரிடம் ஒருவர் 'உங்களுக்கு என்ன தெரியும்?' என்று வினாவினார். சாக்ரடீசு, “எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும்; அது எனக்கு ஒன்றும் தெரியாது' என்பது” என்றார்.
தமிழ்நாட்டில் சித்தராக விளங்கிய திருமூலர் என்பவரோ “என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்; என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன்” என்றார்.
திருவள்ளுவரோ “அறிய அறியத்தான் அறியாதது எது” என்பது புலப்படும் என்றார்.
‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு' என்பது ஔவையார் பாட்டு. இவ்வாறாகவும் கல்விச் செருக்குக் கொள்வது தகுமா? இதனால் ‘யாம் பேரறிவுடையேம் என்று ஒருவர் கொள்ளும் செருக்கு அவர் அறிவில்லாதவர் என்பதற்கு அடையாளம் என்கிறார் (841) திருவள்ளுவர்.
ய
இன்னும் சிலர் தாம் படியாதவற்றையும் படித்ததாகக் கூறித் தற்பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இத்தகையவரைக் கருதிய திருவள்ளுவர், 'தாம்படியாதவற்றையும் படித்ததாகக் கூறி நடிக்கும் நடிப்பு, அவர்களை மெய்யாகப் படித்தவற்றைக் கூடப் படியாதவர் என்று எண்ணுமாறு செய்துவிடும்' என நயமாக இகழ்ந்துரைக்கிறார் (845).
முந்திரித்தனம்
கல்விச் செருக்கு
இல்லாவிடினும் சிலர்க்குத்தாம் கற்றதைச் சொல்லிவிட வேண்டும் என்னும் பேரார்வம் இருப்ப துண்டு. சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய காலம் இடம் அறிந்து சொல்லுதல் வேண்டும். கற்றறிந்த பெரியவர்கள் கூடிய கூட்டத்தில் அவர்கள் சொல்லும் கருத்துகளைக் கேட்டு வாங்கிக் கொள்ளுதல் கடமையாக இருக்கவும் அதனை விடுத்து, அவர்களுக்கு முந்தி முந்தி எதையாவது சொல்லிக் கொண் டிருத்தல் அறிவு வளம் பெற வேண்டிய மாணவர்க்கு ஆகாத் தன்மையாம் (715)
இ
திறமையான வணிகன் பொருள்களை வாங்கும் இடத்தில் வாங்கும் காலத்தில் வாங்கி, விற்கும் இடத்தில் விற்கும் காலத்தில் விற்பதுபோலக் கற்பவரும் அறிவைப் பெறத்தக்க இடங்களில் காலங்களில் பெற்று, பயன்படுத்தத் தக்க இடங்களில் காலங்களில்