உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் 6

பயன்படுத்தல் வேண்டும். இதனை நோக்கியே காலம் அறிதல், இடம் அறிதல். வலியறிதல் என்றெல்லாம் திருவள்ளுவர் கூறினார்.

அறிவனைச் சார்தல்

‘அறிவே கடவுள்' என்று ஆன்றோர் கூறுவர்; அறிவுடைய ஆன்றோர்களை ‘அறிவர்’ என்றே வழிபட்டும் வருதல் உண்டு. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவன்' என்பது நம் முன்னோர் கொடை. திருவள்ளுவர் தம் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடலில், 'கற்றதனால் ஆகிய பயன் என்ன?' என்று ஒரு வினாவை எழுப்புகிறார். “தூய அறிவின் வடிவானவனின் நல்ல அடிகளை வணங்காதவர் தாம் கற்ற கல்வியால் என்ன பயன்?” என்பதே அவ்வினா. அதனால் தூய அறிவின் வடிவாம் இறையை வழிபடுதலே அறிவைப் பெற்ற பயன் என்பது விளங்கும். அறிவைப் பெற விரும்புவோர் அறிவனை வணங்க வேண்டும் என்பது இயற்கைதானே!

நல்ல மாணவராக விரும்புவார் வள்ளுவர் காட்டும் இவ்வழிகளை நன்கு அறிந்து நலம் பெறுவார்களாக!