உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் 6

உவப்பத் தலைக்கூடலும் நினையப் பிரிதலும் மட்டும் புலமையர் தொழிலாமோ? இக்கூடல் அமைந்து விட்டால் பின் என்ன குறை? உவப்பக் கூடியது எதனால்? உள்ள நிறைவால்! உள்ளப் பிரிவது எதனால்? உள்ள நிறைவால்! இந்நிறைவு உண்டாகி விடுமானால் வேறு என்ன குறைவுண்டு!

து

"உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?”

என்பது பாரதியின் பாடல்.

66

"புலவர்களோடு அளவளாவும் இன்பத்திலும் உயர் இன்பமென ஒன்று விண்ணகத்து இருக்குமானால் அதனையும் ஒருமுறை பார்த்து விடுவோம்” என்பது புலமைக் காதலர் ஒருவர்

உரை.

பொருள் விரிவு

ஆசிரிய நிலையில் இன்னும் இதற்கு விரிபொருள் காணலாமே! கற்பிப்பார் புலமையர்; கற்க வருவாரும் புலமை தேடி! இருவருக்கும் ஊடகம் புலமை! கற்பிப்பாரும் கற்பாரும் உவப்பத் தலைக்கூடல் தானே, வகுப்பு! கற்பித்தல்!

பூஞ்சோலைக்குள் புகும் வண்டென ஆசிரியரும் மாணவரும் தலைக் கூடும் ஆர்வத் திளைப்புத்தானே கலைவளம்! நோக்கக் குழையும் விருந்தென ஆசிரிய நிலையோ, மாணவ நிலையோ அமைந்து விடுமானால் விருப்புறு விருந்து ஆகிய கல்வி, வெறுப்புறு மருந்தாக அல்லவோ அமைந்து விடும்!

மாணவர் மையத்தில் எப்பொழுது சேர்வோம் என்னும் வேட்கை ஆசிரியர்க்கும், ஆசிரியரை எப்பொழுது கண்டு பாடம் கேட்போம் என்னும் வேட்கை மாணவர்க்கும் ஒப்ப ஏற்படும் ஒரு நிலைதானே உவப்பத்தலைக்கூடல்! வகுப்பு முடிந்தாலும் கல்வியையும் கற்பித்த ஆசிரியரையும் நினைந்து நினைந்து மீள வரத் துடிக்கும் மாணவரும், அவர்க்குச் சுவை சுவையாய் நயம் நயமாய்க் கற்பிக்க வேண்டி விரும்பி விரையும் ஆசிரியரும் உள்ளப் பிரிபவர் தாமே!

‘அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு’

(74)