உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

29

தாம் வைத்துள்ள செல்வத்தைப் பயன்படுத்தாமல் ஒழிந்து போவாரை நோக்கி, 'இவர் பிறர் உதவிக்கு அதனால் அடையும் இன்பம் என்பதொன்றை அறியவே மாட்டாரோ' என்று வருந்திய வள்ளுவக் கவலை (228) கற்றறிந்த கல்வியை ஈயாக் கருமியை - அத்தொழிலையே வாழ்வு வருவாய்த் தொழிலாக ஏற்றிருந்தும் - முற்றாக ஈயாக்கருமியைக் கருதின் எத்துணை மடங்கு கவல்வு அடையும்!

கொடுங் கருமி

-

கொடுமையிலும் கொடுமை, கற்றறிந்த ஒன்றைப் பிறர்க்குக் கருதிக் கருதிக் கற்பியாக் கொடுமையாகும். "இந்த மருந்தை உண்டால், உயிர் போகும் நிலையில் இருப்பவனும் எழுந்து நட மாடுவான்' என்னும் மருந்து கண்டான் ஒருவன், அம்மருந்தை எவர்க்கும் சொல்லாமலே இறந்து போனான்! இக்கொடுமையிற் கொடுமை உண்டோ” என்கிறது கலித்தொகை! (129)

தாமின்புறும் கல்வியைப் பிறரும் இன்புறத் தாராமை தானே இக் கொடுமை!

'வருந்திய செல்லல் தீர்த்த திறனறி யொருவன்

மருந்தறை கோடலிற் கொடிதே

என்பது அது. அவனும் “திறனறி ஒருவன்” என்பது இன்னும் எத்தனை கொடுமை! கண்ணொளி கொடுத்தலில் கை தேர்ந்த ஒருவனே, கண்ணைக் கெடுத்த கொடுமை போல்வதன்றோ அது.

கூடலும் பிரிதலும்

புலமையுடையவரைப் புலவர் எனல் பழவழக்கு. இந் நாளில் தமிழ்ப் புலவர் அளவில் பொருள் சுருங்கிற்று. எக் கல்வி கற்பிக்கும் புலமையாளரும் புலவர்களே, அவர்கள் பணி குறித்து, “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்

என்னும் குறள் கருதத் தக்கதாம்.

-

-

-394

புலமையாளர் ஆசிரியர் தொழில், ஒருவரோடு ஒருவர் கூடுங்கால் மகிழ்வாகக் கூடுதல்; அளவளாவி ஆய்தல், இவ் வின்பக் கூடல் மீளவும் எப்பொழுது வாய்க்குமோ என உள்ளம் உருகப் பிரிதல் என்பதாம்.