உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மேற் கோள்

66

இளங்குமரனார் தமிழ்வளம் 6

ஒரு நாள் என் வழக்கப்படி திருக்குறளைப் படித்தபோது 'தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்’ என்பது தென்பட்டது. அதனால் உருசிய நாட்டினரும் தமிழ் நாட்டினர் போல் திருக்குறளைச் சுவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என எண்ணி மொழி பெயர்க்கத் தொடங்கினேன்” என்கிறாரே உருகிய நாட்டு அந்திரனோவ். அச் செய்தி மேற் கோளுக்குச் சொல்லும் செய்தியா? நாம் மேற் கொள்ள வேண்டிய செய்தி அல்லவோ!

கல்விச் செல்வச் சீர்

பொருட் பெருக்கம் நிலப் பெருக்கம், மனைப் பெருக்கம் தோட்ட துரவுப் பெருக்கம் எத்துணை இருப்பினும், வடிகட்டிய கருமியாக இருப்பாராலும் தம்மோடு கொண்டு போகிவிட முடியாதே. அவர் தாமும் பயனெய்தார்! பிறரும் பயனெய்த விடார்! அப்பொருள் அவர்வாழ் நாளில் பயன் தாராமல் வாளா கிடக்கும் அவ்வளவே! அவர்க்குப் பின் வருவாரால் கொள்ளப் படும்! கொடுக்கவும் படும். ஆனால் கல்விப் பொருள் அத் தகையதா? கற்றவன் தெளிவோடும் உணர்வோடும் இருக்கும் போதே அதனை வாரி வாரி வழங்குதல் வேண்டும். அதுவே அவனுக்கும் கல்வி வளம்! பெற்றார்க்கும் பெருவளம்! அதனைப் பயன்படுத்தாமல் அவன் முடிந்து போனால் அவன் பெற்ற புலமையும் மடிந்துதானே போகும்? மற்றைப் பொருள் களைப்போல் வைத்துப் போக வழியுண்டா?

செல்வக் கருமியால் ஏற்படும் கேடு சிறிதேயாம்! ஆனால் கல்விக் கருமியால் ஏற்படும் கேடே பெருங்கேடாம். தான் பெற்ற உலகப் பெருங்கடனை ஒன்றுக்குப் பத்தாகத் தந்து தீர்க்க வேண்டியவன், ஒன்றுமே உதவாமல் தானும் தன் வழி முறையும் தீராக் கடனாளியாகிச் செல்கின்ற உறிஞ்சி (அட்டைப்பூச்சி) அவனாம்! அதனால், கொடுக்கக் கொடுக்க வளரும் கொடைப் பெருக்கக் கல்வியைக் கொடாத கருமி, கண்ணைப் பெற்றிருந்தும் கண்ணிலான்! மாந்த வடிவில் இருப்பினும் விலங்கன்! பிறனும் கண்ணிலனாய் - விலங்கனாய் - (கருமியாய் அமைந்து) பிறரையும் கண்ணிலராய் - விலங்கராய் உலவவிடும் கடையன். ஏனெனில், கல்வி, கண் என்றும், கல்லான், விலங்கு என்றும் அறிந்தவன் அல்லனோ அவன்?

-

கு