உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

27

தான் பெற்ற இன்பம் உலகம் பெறட்டுமே என்னும் தளிர்ப்புத் தானே!

ஒரு நோயன்; தீராநோயன்; அந்நோய், ஒரு சிறந்த மருத்துவர் வழங்கிய சிலவேளை மருந்துகளால் தீரக் காண்கிறான்; களிப்புறுகிறான்; முந்தையினும் மும்மடங்கு நலத்தனாய் உலவு கிறான். தான் பெற்ற இன்பத்தை அந்நோய் கண்டவர் எவ ரெனினும் அவரைத் தேடித் தேடி ஓடி ஓடி உரைக்கின்றானே ஏன்? தான் பெற்ற இன்பத்தை அவர்களும் எய்தலாமே என்னும் தழைப்புத்தானே!

கடமை

இத்தகு இயற்கையான இறைமைப் பேருள்ளம், கற்பிக்கும் மை மேற்கொண்டார்க்குத் ததும்ப வேண்டும் என்பது வள்ளுவர் கல்விக் காதல். அதனால்.

66

'தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்"

என்றார்.

இன்புறக் கற்றல்

399

கற்றறிந்தார் எதனால் இன்புறுகிறார்? தாம் கற்ற கல்வி யால் இன்புறுகிறார். அக்கல்வியால் உலகமும் இன்புற வேண்டும் என விரும்புகிறார். அதனால், தாம் கற்ற கல்வியை அவரும் கற்கச் செய்கிறார். அதற்காக, அக் கல்வியில் தணியாப் பேரார்வம்

காண்டு, தாமும் மேலும் மேலும் கற்கிறார். கற்கக் கற்க அக்கல்விப் பெருக்கத்தை உலகமும் பெற, ஒன்றும் ஒளித்து வைக்காமல் ஒழிவும் இல்லாமல் கற்பிக்கிறார்.

இவ்வின்பம் ஒருநாள் இன்பமா? ஒரு பொழுது இன்பமா? வாழ்நாள் முழுமை இன்பம்; பின்னும் வளர் புகழ்ப் பேற்றால் தம் வழிவழிக் குடியினர்க்கும் உயர் பேரின்பம்! 'இக்குடியில் பிறந்தோமே' என்னும் உள்ளின்பம் மட்டுமோ? 'இக்குடியில் பிறந்தார்' என்று பிறர் பிறர் பாராட்டும் சொல்லின்பமும் துணையின்பமும் நிலை பேற்றின்பமுமாம்! இத்தகு இன்பங் கண்டவர் அக்கல்வித் தொண்டிலேயே ஊறி ஊறித் திளைக்க வேண்டாவா? ஊன்றி ஊன்றி உயர் பணி புரிய வேண்டாவா? எத்தகைய இயற்கைப் பெரும் பேறு கல்விப் பேறு! ‘ஈத்துவக்கும் இன்பம்' அதற்கு இணையாக ஒன்று உண்டா?