உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் 6

பிறப்பினர் அனைவருக்கும் உரிய

பாது

மக்கட் வுடைமைப் பொருளாகிய கல்வியே வள்ளுவக் கல்வி. குலப் பிரிவுக்கும் இனப்பிரிவுக்கும், பால்பிரிவுக்கும், தொழில் பிரிவுக்கும் அடிமைப்பட்ட கல்வி அன்று அது. 'கல்லான் விலங்கு' 'கல்லான் கண்ணிலான்' என்னும் வள்ளுவத்தில், வருணக் கல்விக்கு எள்ளத்தனை இடமும் இல்லை! அதனைக் கடைப் பிடியா மடமையே, நெட்ட நெடுங்காலம் தமிழ் இனத்தை அடிமையாய்-விலங்காய்-விலங்காண்டியாய் வைத்து விட்டதாம் த்தெளிவுடன் நல்ல ஆசிரியராக விளங்க வேண்டுவோர்க்கு வள்ளுவர் கூறும் வழிகளைக் காண்போம்.

தான் இன்புறுவது

உதகை முதுமலைக் காடு; நிறை நிலாப் பொழுது; நடு யாமம்; ஆழ்ந்து செல்லும் நீரோடைக் கரை. அவ்வோடைக்கு அப்பால் கரையில் இருந்து நெஞ்சைப் பிணைக்கும் தன்னந் தனியிசை; பாடுபவரே இயக்கும் தட்டைப் பறை. ஓ! ஓ! அத் தண்ணிலா வேளையில்-வண்டொலியும் மலர்மணமும் தென்ற லும் உயிர் தளிர்க்க வைக்கும் பொழுதில்-எழுந்த இன்னிசையின் கொள்ளை ன்பத்தை எப்படி எச்சொல்லால் இசைப்பது?

கேட்டுக் கேட்டு வயப்பட்டு நின்றவர், தம்மோடு வந்து தங்கும் மாளிகையில் நெட்டுறக்கத்தில் ஆழ்ந்தவர்களையும் எழுப்புகிறார். அனைவரும் செவியைக் கூர்ப்பாக்கி இசை வெள்ளத்தில் நீந்துகின்றனர். நீளத் திளைக்கின்றனர். எழுப்புவது குற்றமாக எழுப்புபவர்க்குத் தோன்றவில்லை! எழுப்பப் பட் வர்களுக்கும் சின்னஞ்சிறு துயர் தந்ததாகவும் தோன்றவில்லை! முதற்கண் இசையைத் துய்த்தாரே கூர்ஞ்செவியர், அவர் ஏன் பிறரை எழுப்பினார்! அவர் பேருள்ளம், அவர் ஏன் இன்பப் பேற்றைப் பிறரும் பெற வேண்டும் என்னும் தளிர்ப்பில் இருந் தமையாலேயே எழுப்பினாராம். இல்லாக் கால் அவர் எழுப்பு வானேன்?

ஆ! ஆ! என்ன வனப்பு! படமெடுத்து விரிந்து நிற்கும் பாம்பு! அப்படத்தின் கீழே காணக் காணக் கவின் செய்யும் கைபுனைந் தியற்றா இலங்கம் (இலிங்கம்)! ஆம்! ஒருமலர். நாகலிங்கம் என்பது அதன் பெயர்! அதனை முதன் முதலாகக் கண்டு வியந்தவன் எத்தனை பேர்களுக்குக் கூறுகிறான்! எத்தனை பேர்களுக்கு அப்பூவைக் காட்டுகிறான்! எத்தனை எத்தனை பேர்களுக்கு அதன் பெயர்ப் பொருத்தத்தை எடுத்துரைக்கிறான்! ஏன்?