உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் 6

'நு

'நூல்' என்பதே 'நுவல்' என்பதன் வழியாக வந்த சொல்லே. நுவல்வது யாது, அது ‘நூல்'. பாடம் சொல்லியும் எடுத்துரைத்தும் அழுந்தத் தழும்பேறிய செய்திகளே நூலுருக் கொண்டன. இவற்றை எண்ணின் 'நவில் தொறும் நூல் நயம்’ என்பது ‘நுவல் தொறும் நூல் நயம்' என்னும் பொருளுடைய தாதல் விளங்கும்.

சுவைக்காக ஒரு முறை, சொல்லுக்காக ஒரு முறை, பொரு ளுக்காக ஒரு முறை, அறத்திற்காக ஒரு முறை, அணிக்காக ஒரு முறை, துறைக்காக ஒரு முறை, நிறைக்காக ஒரு முறை எனப் பன்முறை சொல் விரித்துரைக்கும் போது நூலின் நயங்கள் பளிச்சிடும். அந்நூல் போலவே பண்புடையாளர் நட்பும் பல்கால் பல நிலைகளில் பழகப் பழகப் பளிச்சிடும். 'நூலறிவும் பண்பாடும் ஒருங்கே வேண்டும் கற்பிப்பார்க்கு' என்பதை விளக்க இம்மணிக் குறளினும் இம்மாணுவமையினும் மற்றொன்று உண்டோ? உண்டோ?

அறிவு உரு கல்வி

தூது சொல்லச் செல்வார்க்கு அறிவு உரு ஆராய்ந்த கல்வியாகிய மூன்றும் செறிவாக வேண்டும் என்னும் திருக்குறள் (684). இம்மூன்றும் ஓதுதல் தொழிலர்க்கும் இன்றியமையா தனவாம்.

6

அறிவு வளம் வழங்கச் செல்வார்க்கு அறிவு வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும் என்பது இல்லை. வழங்க வேண்டும் அளவினும் பதின் மடங்கு அளவு கையிருப்பில் இருத்தல் வேண்டும். 'சட்டியில் இருந்தால்தானே அகப்பைக்கு வரும்' என்பது பழமொழி.

‘உரு’ என்பது தோற்றமாகும். தோற்றப் பொலிவு, கண்ட அளவில் கண்டார் உளம் கவர்ந்து வயப்படச் செய்யும் வலியது. கவர்ச்சி என்பது ஆர்வத்தால் நெருங்கவும் அள்ளூறிக் கொள்ளவும் ஏவுவது. ஆகலின், தோற்றம் உடையவர் ஏற்ற மிக்கவரே.

ஆராய்ந்த கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வி அன்று. மனப்பாடம் செய்து கிளிப்பிள்ளை போல் ஒப்பிப்பதன்று. 'அறிவுடையார் எல்லாம் உடையார்' (430) என்பதை மெய்ப் பிப்பது.