உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சொல்வன்மை

இளங்குமரனார் தமிழ்வளம் 6

கற்பிப்பார்க்கு இன்றியமையாத ஒன்று சொல்வன்மை ஆகும். சொல்வன்மை என்பது சொற்சுவை மட்டுமன்று. பயன் மிக்கவையாகவும் இருத்தல் வேண்டும்.

"அரும்பயன் ஆயும் அறிவினர் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்”

(198)

என்று வள்ளுவம் கூறும். தெளிவமைந்த தேர்ந்த அறிவினர் பொருளற்றவற்றைத் தம்மை மறந்தும் கூட உரைக்க மாட்டார் என்றும் கூறும் (199). ‘பலரும் வெறுப்புறுமாறு பயனற்றவற்றைச் சொல்லுபவனை எவரும் இகழ்வர்" என்னும் போது (191) அதனை அறிவறிந்த ஆசான் மேற் கொள்ளலாகுமா? சொல்லல், கேட்டல்

அறிவறிந்து, சொல்வார்க்கு இருதிறங்கள் வேண்டும். ஒன்று, எவரும் எளிமையாக அறிந்து கொள்ளுமாறு விளங்கச் சொல்லுதல்; மற்றொன்று, பிறர் அறிந்து கொள்ள முடியா வகையில் ஒருவர் நுண்மையாகக் கூறினாலும் அதனை அறிந்து கொள்ளும் திறமை என்பன அவை (423).

சொல்பவர் சொல்பவராக மட்டும் இல்லாமல், கேட்பவராகவும் இருத்தல் வேண்டும்; அவ்வாறானால்தான் தாம் சொல்வதைக் கேட்பார் திறனறிந்து கூற முடியும் என்று தெளிவு பெறச் செய்கிறார் திருவள்ளுவர்.

நாநலம்

சொல்வன்மையைக் கூறத் தொடங்கும் வள்ளுவர் சொல் வன்மையை ‘நாநலம்’ என்றே குறிப்பிடுகிறார். அதன் நன்மையை விளக்குவார் போல நலத்தை நான்கு முறை பயன்படுத்துகிறார்.

அது,

"நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று"

என்பது (641).

வி

சொல் கேட்டவர்களை வயப்படுத்தி ஆட்கொள்ள வேண்டும்; 'பொழிவை நிறுத்தி விட்டாரே; இனி எப்பொழுது கேட்போம்' என ஆவலைத் தூண்ட வேண்டும் கேட்டவர்கள் சொல்லிய சொல்லைக் கேட்டவர்களுக்கும், ‘எப்பொழுது