இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது என்றால் ஒரு சிறைக் கூடம் மூடப்படுகிறது' என்று உலகளாவச் சொல்லப்படு மானால், அக்கல்விப் பணிக்குத் தம்மை ஆளாக்கிக் கொள் வோர் பணி தனிச் சிறப்பினதே அன்றோ!
‘எழுத்தறி வித்தவன் இறைவன் ஆவான்'
எனக் கண் கண்ட ஒளிப் பொருளாக - இறையாக அல்லவோ ஆசிரியரைக் கண்டது தமிழுலகம்! அப்பெருமையைக் காத்துக் கொள்ள வேண்டியது ஆசிரியருலகக் கடமை தானே!