உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் உருண்டை:

3. நல்ல கணவனாக

ஒரு குளத்தின் உள்வாய்; வளமான வண்டல் மண் படிந்து கிடக்கிறது; மண் நீர்ப்பதமாக இருக்கிறது. கூண்டு வண்டி அசைந்து அசைந்து வருவதுபோல், ஒரு நத்தை மெல்லென அசை நடையிட்டு வருகிறது. அஃது ஆண் நத்தையா, பெண் நத்தையா? தெரியாது! ஆனால் இரண்டுள் ஒன்று!

சற்றே தொலைவு! இன்னொரு கூண்டு வண்டி வருவது போல ஒரு நத்தை! அஃது ஆணா, பெண்ணா? இரண்டுள் ஒன்று இரண்டும் அசைந்து அசைந்து நகர்கின்றன! நகர்ச்சி இடை வெளியைக் குறைத்துக் குறைத்து ஓரிடத்தில் ஆக்கி விடுகின்றது!

-

ஓர்

நெருங்கிய நத்தைகள் - விந்தையினும் விந்தை உருண்டையாகி விட விட்டன! ன! உருண்டைகள் கள் இரண்டும் ஓர் உருண்டை ஆகிய உணர்வு மிக்க உயிர்ப் பிணைப்பு ஆகி விட்டன! இயற்கைப் பிணைப்பு என்னே! என்னே!

6

'ஓர் உயிரை இரண்டாகப் பகுத்து வைத்தாற் போன்ற தலைவன் தலைவியர் மாண்பை' நற்றிணை கூறும் (128), அவ் வுயிரொன்றிய காதலை-அன்பை-இந் நத்தைகள் காட்டு கின்றனவே! உயிரின் சிறப்பு எத்தகையது! உயிர்க் காதற் சிறப்பு எத்தகையது!

இன்பம்

உயிரி!

நத்தை என்ன பேரறிவு உயிரியா? ஓரறிவு தாண்டிய ஈரறிவு

“நந்தும் முரளும் ஈரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

என்பது தொல்காப்பியம். (மரபு 28)

நத்தை, இப்பி, சங்கு, கிளிஞ்சல் ஆகியவை ஈரறிவு உடை யவை! இவ்வெளிய உயிரியின் இன்ப வேட்கையும் இத் தகைத்தா?' என்று எண்ணும் போதே, மீளவும் தொல்காப்பிய நூற்பா மின்னலிடுகின்றது!