உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் 6

‘எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்"

என்பது அது. (பொருளியல் 29).

இயற்கையின் நுட்பத்தை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் தொல்காப்பியர். "இன்பம் என்பது எல்லா உயிர்களுக்கும் அமைந்த உயிருரிமை! அவ்வுரிமை அவ்வுயிரியின் பிறப்போடே பிறந்து வளர்ந்து பெருகி வரும் தன்மையுடைது” என்பது இதன் திரட்டு.

காமம்

இன்பத்துக்கு ஒரு பெயர் ‘காமம்’ என்பது திருக்குறள் இன்பத்துப் பாலைக் ‘காமத்துப்பால்' என வழங்குதல் பெரு வழக்கு. இன்பத்துப் பாலில் 'இன்பம்' என்னும் சொல்லாட்சி ஈரிடங்களிலேயே உண்டு. ஆனால், ‘காமம்' என்பதோ முப்பத் தொன்பது இடங்களில் உண்டு, இன்பம் இடம் பெற்ற இரண்டு குறள்களிலும், (1166, 1320) காமமும் உண்டு. ஏன், வள்ளுவர் இவ்வாறு காமத்திற்குப் பெருவழக்குத் தந்தார்?

து.

இன்பம் என்பது எல்லா உயிரிகளுக்கும் பொதுவகைய காமமோ அத்தகைத்தன்று. மாந்தர்க்கே-ஆறறிவு உயிரிக்கே- சிறப்புரிமை உடையது. ஏனெனில், உடலின் அளவில் நில்லாமல், நெஞ்சின் நிறைவாகி, ஈருயிர் ஓருயிராய் ஒன்றும் பெருமையது! இதனைக் ‘காமம்' என்னும் சொல்லே தெளிவிக்கும். ஆதலால், வள்ளுவர் அச் சொல்லை பயில வழங்கினார்.

66

“ 'கமம்' நிறைந்தியலும்” என்பது தொல்காப்பியம்

(உரி. 57)

'கமம்' முதல நீண்டு 'காமம்' ஆயிற்றாம். இதனைக் ‘காமஞ்சான்ற' என்பார் அவர் (கற் 51), சாலுதல் நிறைந்தமைதல்.

'காமம் சான்ற' என்பதற்கு விளக்கம் வேண்டுமா? அதன் விளக்கமே வள்ளுவக் காமத்துப்பால். நல்ல கணவனாக விரும்பு வானும், நல்ல மனைவியாக விரும்புவாளும் கட்டாயம் காமத் துப்பால் கற்றாதல் வேண்டும். எப்படி? தனித்துத் தனித்தும், கற்றல் வேண்டும்! கூடிக் கூடியும் கற்றல் வேண்டும்!

இனி வள்ளுவர் வழியில்,

நல்ல கணவனாக அமைவான் இயல்புகளைக் காணலாம்.