உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

1

47

வள்ளுவக் கணவன்

வள்ளுவக் கணவன், கற்றவன்; கசடறக் கற்றவன்; வாழ்வில் நிற்கக் கற்றவன் (391).

அவன், 'மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்றும், 'நன்றின்பால் உய்ப்பது அறிவு' என்றும் கண்ட செம்பொருட் செம்மல் (34; 422).

'தன்னைத்தான் காதலித்து அத் தகவால் எத்தகு தீவினையையும் நாடாத தகவாளன் (209).

தனக்கின்னாமை தருவதை உணர்ந்த தன்மையால் பிறர்க் கின்னாமை எண்ணாப் பெருந்தகை (318).

“உள்ளம் உடை மை உடைமை; வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்' என்னும் உடைமையும் உணர்ந்த உயர்ந் தோன் (292; 661). வினைக்கிழான் ஆகிய அவன், ‘செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடிவிடும்' எனத் தெளிந்த மனைக்கிழான் (1039) எதிரதாக் காக்கும் தேர்ச்சியன் ஆகலின் அதிர வருவதோர் நோய்க்கு ஆட்படாதவன் (429).

கடுமொழி, கையிகந்த தண்டம், கயச்சினம் என்பவற்றைக் கருதாக் கனிவாளன் (567; 304). களவியல் கற்பியல் கண்ட கலைவல்லான். தந்தை தாய் துணை என்னும் இயல்புடைய மூவரையும் இனிது போற்றும் இயல்வல்லான் (41) விருந்து பேணி விரிபயன் காணும் விழுப்பன்.

பெருமையும் உரனும் ஆடுஉ மேன'

என்னும் ஆண்மை இயலும்,

'செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

(தொல். கள. 7)

அறிவும் அருமையும் பெண்பாலான (தொல். பொருளியல்.

15) என்னும் பெண்மை இயலும் நன்குணர்ந்த நம்பி.

ஒருமை மகளிரே போலப் பெருமை'யும் பெற்ற பேராளன் (974).

செலச்சொல்லலும், வெலச் சொல்லலும் வல்ல

சொல்லின் செல்வன்

(722; 645)

ஆகலின், அவன் எடுத்துக் காட்டாகக் கூறத்தக்க நல்ல கணவனாகத் திகழ்கிறான்.