50
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
உணர்வையும் படைத்து, துய்க்கும் வாயில்களையும் இயல்பாகப் படைத்து, உலகை உலகை இயக்கும் இயற்கை எத்துணை அரிய படைப்பாளி! அம்மவோ! இவ்வியற்கை விந்தையே விந்தை!
66
'அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு”
நினைக்க இனிமை
தேனை நினைத்தால் இனிக்குமா? பார்த்தால்கூட-கையில் எடுத்தால் கூட-இனிப்பதில்லையே! நாவில் விட்டால்தானே இனிப்பு!
யாழை நினைத்தால் செவிக்கு இன்பு உண்டா? யாழைக் கண்டாலும், கையால் எடுத்தாலும் செவிக்கு இன்பம் ஆவது இல்லையே! கலை நயம் பொருந்த மீட்டிய இசை செவியைத் தழுவினால் தானே இன்பம்!
தென்றலை நினைத்தால் உடலுக்கு இன்பமா? வாயிலையும் பலகணிகளையும் மூடி வைத்துக் காண்டு தென்றலை நினைத்தால் உடலுக்கு இன்பம் உண்டாகி விடுமா? வெயிற் காற்றோ, விசிறிக் காற்றோ தென்றலாகி விடுமா? அதுவும், மாலைப் பொழுதில் மதியம் ஒளிவீச மலர்ப் பந்தல் தாவி வரும் தென்றல் இன்பத்தை-நினைவு மட்டும் தந்து விடுமா?
ஆனால், நினைத்த பொழுதிலேயே நினைத்த இன்ப மெல்லாம் உடனுக்குடன் தந்து விடுகின்றாளே என் உயிர்த் துணை; உரிமைத் துணை! அத்துணை, நேரில் நின்று வழங்கினால் தான் இன்பமா? இல்லையே. நேரில் இல்லாமலும் நினைத்த, நினைத்த இன்பங்களெல்லாம் நெஞ்சில் சுரக்கச் செய்து விடுகின்றாளே!
“வேட்ட பொழுதில் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்”
உயிர் தளிர்த்தல்
(1105)
ஆற்றங்கரையிலே நிற்கும் இத்தென்னை மரங்கூட வாடி விட்டதே; வறண்டு விட்டதே; பட்டே போகுமோ எனக் கசிந்தேன்; ஆனால், வானமுதாகிய மழை பொழிந்தது; ஆற்றின் வழியேயும் நீர் ஓடியது; 6 வான்மழைப் பொழிவும் மண் வழிக்கசிவும் தென்னைக்கு அமுதமாய்விட அது தளிர்த்துக் குலுங்கிய குலுக்கல், என்னை மகிழ்விலே குலுங்கச் செய்தது!