―
திருக்குறள் ஆராய்ச்சி 1
51
முற்றாக உதிர்ந்து போயினவே மாவிலைகள்! மொட்டை மரமா இது! என மயங்குகின்ற வேளையிலே, இளவேனிற் பருவம் தவழ்ந்தது! யார் சொல்லி வைத்தார், இளவேனில் வந்ததென்று! குஞ்சு நெருப்புப் போலப் பிஞ்சு இலைகள் துளிர்த்துக் குழந்தை யாட்டம் போட்டுக் கொஞ்சியதே! பருவக் கொடையாம் அமிழ்தத்தால் இக் காட்சிக் கொடை மட்டுமா க் கொடையும் சொட்டுமே!
கனிக்
காற்றிலே முரிந்தது முருங்கை! முடிந்துவிட்டதா வாழ்வு? பக்கமெல்லாம் தழைத்துக் கிளைத்துப் புத்தம் புதுத்தளிர் துள்ளுகிறதே! வேருக்கு வாய்ந்த நீரும் உரமும் அல்லவோ மொட்டைத் தலைக்குப் பசும்போர்வை போர்த்தி விட்டன!
இவையெல்லாம் ஓரறிவு உயிரிகள்! ஓடி நடவாதவை! உள்ளமில்லாதவை! உரையாடாதவை! வாடிக் கிடந்த அவை தளிர்த்ததை உணரும் யான், இப்பொழுது யானே தளிர்க்கக் காண்கின்றேன். அவற்றின் இலைத் தளிர்ப்புப் போல கிளைத் தளிர்ப்புப் போல உடல் தளிர்ப்போ, உறுப்புத் தளிர்ப்போ என் தளிர்ப்பு? உயிர்த் தளிர்ப்பு அல்லவோ என் தளிர்ப்பு! உயிரும் தளிர்க்குமா? தளிர்க்க வைப்பார் உண்டா? தளிர்க்க வைப்பார் இருந்து, தளிர்க்க வைத்தலைக் கண்டு கொண்ட எனக்கு ஐயம் உண்டா? உயிர் தளிர்க்கச் செய்வது; நீர் அமிழ்தும் பால் அமிழ்தும் பயன் அமிழ்தம் என்றால்; அவ்வெல்லாம் கூடிய கூட்டமிழ்தால் செய்யப்பட்டது அல்லவோ என் துணையின்
உடல்!
“உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்”
அரிவை இன்பம்
(1106)
என் பெற்றோரொடும் இருந்தேன். அவர்கள், அறிவறியச் செய்து ஆளாக்கிய பின்னரும் அவர்களுக்குத் துணையாக நான் நிற்பது அல்லாமல், அவர்கள் துணையில் வாழ்வது தக்கதா? செய்யாமல் செய்த அவர்கள் உதவிக்குக்-காலத்தினால் செய்த அவர்கள் உதவிக்கு-பயன் கருதாமல் செய்த அவர்கள் உதவிக்கு, இணையான உதவியை நான் செய்ய முடியாவிட்டாலும், இயன்ற உதவியைச் செய்யலாமே! மேலும், நானும் அவர் களைப் போல் என் கடனைச் செய்யக் கூடியவன் தான் என்னும் உறுதிப்பாட்டை உண்டாக்குதல் என் கடனல்லவா! அதனால்,