உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவுப் பேறு

திருக்குறள் ஆராய்ச்சி 1

59

முழுமையான இன்ப நிலைக்களமாக இல்லறம் கொண்ட கணவன் கடமை கருதிப் பிரிதலால் உடல்தான் பிரிகின்றதே அன்றி உள்ளம் பிரிவது இல்லை. மாறாக உள்ளம் விரியவே செய்கின்றது. எங்கே சென்றாலும் என்ன செய்தாலும் செயலற்ற பொழுதுகளில் எல்லாம் தன் துணையின் நினைவே நினை வாய்த் தன் கடமையை விரைவில் வெற்றியாக முடித்து அவளைக் கூடுவதையே கருதுகின்றான்.

·

வீட்டில் அவன் நினைவே நினைவாக இருப்பவளும், செல்பவன் செல்லும் வழியெல்லாம் சேம வழியாக' என்றும், 'எடுத்த செயலெல்லாம் இனிது வெல்க' என்றும் அவன் எண்ணமாகவே வாழ்கிறாள். 'இன்றே வருவாரா? இப்பொழுதே வருவாரா? எம் கவலை தீருமா?' என்று நொடி நொடியும் எதிர்நோக்குகிறாள்!

6

காற்றின் அலைப்பும், மரத்தின் அசைவும், தெருவின் ஒலியும் எல்லாம் எல்லாம் ‘கணவன் திரும்பி வந்துவிட்டான்’ என்னும் நினைவை உண்டாக்க வாயிலுக்கும் உள்ளுக்குமாய் ஊமை நடை நடக்கிறாள். கண்மூடிப் படுத்தாலும் இர வெல்லாம் உறக்கம் இல்லாளாய், ஒருவேளை தன்னை மறந்து உறங்கினும் கனவுக் காட்சியாய்ப் பொழுது கழிய எதிர்நோக்கி வாழ்கிறாள். இவை இருபாலும் இன்பம் பெருக்கும் இயற்கை நெறிகள்!

ஆதலால், 'பிரிந்தவர் கூடினால்' அவர்கள் அவர்கள் பெறும் இன்பம் 'பேசவும் கூடுமோ?' என்று பெருகுதற்குரிய வழியைப் பழி சொல்லி, வாழ்வியல் பழியாக்கி விடுதல் கூடாதாம். அதனால் ‘மிகுந்த அன்பு காட்டி அஞ்சாதே என்று கூறிய கணவர் பிரிந்து சென்றால் அவர் உறுதியாகச் சொன்ன சொல்லை நம்பி இருந்தவர்க்குக் குற்றம் உண்டாகுமோ?' என்று பிரிவாற்றாப் பொழுதிலும் கூட வள்ளுவத்தலைவி மனந்திறந்து பேசுகின்றாள் (1154).

பேராண்மை

பிரிந்து சென்ற கணவன் எளியனா? பேராண்மையாளன். அவன் தனிநிலைப் பேராண்மை; குடிநிலைப் பேராண்மை; நாட்டியல் பேராண்மை என முப்பேராண்மை கொண்ட காண் முழுமையன்.