உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம் 6

“பிறன்மனை நோக்காத பேராண்மை” என்பது அவன் தனிநிலைப் பேராண்மை (148).

"நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த இல் லாண்மை ஆக்கிக் கொளல்” என்பது குடிநிலைப் பேராண்மை

(1027).

“பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு’"

என்பது நாட்டியல் பேராண்மை.

(773)

இம் முப்பேராண்மைகளையும் உடை ய கணவன் தன் மனைவி போலவே தன்னுளம் காக்கும் திண்மையன். நிறை காக்கும் காப்பன். அதனால் நல்லோர்களால் கருதப்படாமல் ஒழிக்க வேண்டிய, அயன் மகளிர் தொடர்பு, மயக்கும் குடி நாட்டம், சூதாட்டம் என்பவற்றைக் கட்டாக ஒழித்தவன் (920). அதனால், "தம்மைப் போன்ற நற்குண நற்செயல் அமைந்த கணவரைப் பெற்றால் அப்பெண்டிர் என்றும் புதிது மணந்து கொண்டு வாழும் இன்ப உலகினராகவே பெருஞ்சிறப்பு அடைவர்” என்பதற்குத் தகப் பாராட்டும் வாழ்வுடையவனாகத் திகழ்கிறான் (58).

பொருள்தேடல், போராடல், தூது, கல்வி என்ற வழி களால் பிரிந்து சென்ற கணவன் தான் மேற்கொண்ட செயலை வெற்றியாக முடித்து விட்டுத் தன் மனைவி நினைவே, நினைவாக மனைக்குத் திரும்புகிறான். தேடி வந்த கணவன்; நாடியிருந்த மனைவி! ஆம்! “பெரிதாற்றிப் பெட்பக் கலக்கின்றனர்” (1276). நிலத்தொடு நீர் இயைந்தாற்போலக் கலக்கின்றனர் (1323).

ஊடல்

ஊர்ப்பிரிவு உயர்ந்த இன்பத் துய்ப்புத் தருதற்குரிய பிரி வாக அமைவதை இருவரும் தம் பட்டறிவால் உணர்கின்றனர். அவ்வுணர்வு என்ன செய்கின்றது? ஊரில் இருக்கும் போதும், உடனாகி இல்லில் இருக்கும்போதும் உறவாகி ஒரு பாயலில் இருக்கும் போதும் அவ்வுயரின்பத்தை அடைவதற்கொரு வழி ருப்பதை இருவர் உள்ளகங்களும் வழிவழியாக வந்த வாழ் வியல் வழக்கால் உணர்ந்து கொள்கின்றன. அவ்வருமையான இன்பக் கருவியே ஊடல் என்பதாம்! ஊடலாவது பாயற் பிரிவு.